நேற்று ஒரு அமெரிக்கவாழ் சிலோன் தமிழருடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பக்கம் திரும்பியது. அவர் ஹிலாரி ஆதரவாளர்.
நான் வேண்டுமென்றே இந்தமுறை ட்ரம்ப் தான் வரவேண்டும். ட்ரம்ப் வந்தால்தான்
அமெரிக்கர்களின் வாழ்வு செழிக்கும் என பேசத்தொடங்கினேன். கொஞ்ச நேரத்தில்
கடுப்பாகிவிட்டார். "சார் ட்ரம்ப் அறிவில்லாத இனவெறியன் சார்.
உங்களுக்கு அவனைப் பற்றி என்ன தெரியும்? அவன் ஆட்சிக்கு வந்தால் எங்களைப்
போன்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு எவ்வளவு பிரச்சினை ஆகும் தெரியுமா?"
என புலம்பினார். நான், "அதெல்லாம் எனக்கு தெரியுது, தெரியலேன்றதை
விட்ருவோம். ஆனா அமெரிக்க, கனடா, ஃப்ரான்ஸ்ல உக்காந்துகிட்டு உங்காளுங்க
சீமான் மாதிரியான நாஜிக்களுக்கு காசுபிச்சை போட்டு தூண்டிவிடும் போதும்,
கொஞ்சம் கூட இந்திய-தமிழக அரசியல் சூழல் அறிவே இல்லாமல் காங்கிரசை அழிக்க
மோடிக்கு ஓட்டு போடுங்க, திமுகவை அழிக்க ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுங்கனு
பிரச்சாரம் பண்ணும்போதும் எங்களுக்கும் இதே கடுப்புதானே வரும்?
என்னைக்காவது அதைப் பத்தி நினைச்சுபாத்திருக்கீங்களா சார்? இனிமே உங்கட
ஆட்களுக்கும் அட்வைஸ் பண்ணுகோ," என சொல்லிவிட்டு பேச்சை முடித்துவிட்டேன்.- நெடிசன் டான் அசோக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக