vikatan.com அனைத்துக் கட்சிகளுக்கும் முன்பாகவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விடுவது
ஜெயலலிதாவின் வழக்கம். ஆனால், இந்தமுறை இன்னமும் தேர்தல் அறிக்கையை
ஜெயலலிதா வெளியிடவில்லை. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு
இரண்டு வாரங்கள் ஆனபிறகும் ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையை வெளியிடாமல்
இருப்பதற்குக் காரணம், அதில் பல்வேறு இலவசப் பொருட்களுக்கான அறிவிப்புகள்
உள்ளன என்கிறார்கள்.இப்போதே அதனைச் வெளியிட்டால், மக்கள் மறந்துவிடுவார்கள்
என்று சொல்லப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையிலான குழுவினர் தங்களது எண்ணங்களை
வடித்து அறிக்கையைத் தயாரித்து ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துவிட்டனர்.
இதில் வாஷிங் மெஷின் அல்லது ஃபிரிட்ஜ் கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டு உள்ளதாம். ஆனால், இவை இரண்டும் விலை அதிகம் என்பதால் வேறு ஏதாவது கவர்ச்சிகரமான திட்டமாக இருந்தால் நல்லது என்று ஜெயலலிதா நினைத்தாராம். அதனால், மொபெட் கொடுக்கலாம் என்று அவருக்குத் தோன்றியதாம். முதலில் சைக்கிள் கொடுத்ததுதான் பொதுமக்களிடம் தனக்கு நல்ல பெயரை உருவாக்கியது என்று நினைக்கும் ஜெயலலிதா, மொபெட் கொடுத்தால் கிராமப்புற மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று யோசித்தாராம். அதன் விலை குறித்து பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கொட்டேஷன்கள் வாங்கிப் பார்த்துள்ளாராம் முதல்வர்.
ஐவர் அணி!
சட்டசபைத் தேர்தலைக் கண்காணிக்க ஐவர் குழுவை ஜெயலலிதா அமைத்துள்ளார். விஜிலா சந்தியானந்த் எம்.பி., அன்வர் ராஜா எம்.பி., மருதராஜ் எம்.பி., கோபால கிருஷ்ணன் எம்.பி., தூத்துக்குடி சரவணபெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விஜிலா எம்.பி. கிறிஸ்தவ சமயத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கும், அன்வர்ராஜா எம்.பி. முஸ்லிம் சமூகப் பெரியவர்களை சந்தித்துப் பேசுவதற்கும், மருதராஜ் எம்.பி.முத்தரையர் சமூகப் பெரியவர்களை சந்தித்துப் பேசுவதற்கும், கோபால கிருஷ்ணன் எம்.பி., யாதவர் சமுதாயப் பெரியவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கும், தூத்துக்குடி சரவண பெருமாள், பிள்ளைமார் சமுதாயத் தலைவர்களை சந்தித்துப் பேசுவதற்கும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக வலம் வந்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள சமுதாயப் பெரியவர்களையும், தலைவர்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக