"தலைமைத்
தேர்தல் ஆணையம்தான் கண்காணிப் பாக செயல்படுகிறது. தமிழகத் தில் தேர்தல்
ஆணையம் செயல்படவே இல்லை. அத னால்தான் 4,000 கோடி ரூபாய் டிரான்ஸக்ஷன்
விவகாரத்தை கோட்டை விட்டுள்ளது'' என்கிறார்கள் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். அ.தி.மு.க.வின்
தேர்தல் பண விநியோகம் எவ்வளவு துல்லியமாக திட்டமிடப்பட்டு
செயல்படுத்தப்படுகிறது என்பதை... இந்தியாவில் ஒட்டு மொத்த பண விநியோகத்
தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கி கண்டுபிடித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நடக்கும் தமிழ்நாட்டையும் கேரளா வையும் கண்காணிக்கும்
ரிசர்வ் வங்கிக்கு, இந்த இரண்டு மாநிலங்களுக்கும் தொடர்பு இல்லாத
கர்நாடகத்திலிருந்து ஒரு அதிர்ச்சித் தகவல் கிடைத் திருக்கிறது என்கிறது
மத்திய அரசின் வட்டாரம்.
""தமிழகத்தில் ஒவ்வொரு வங்கியின் கிளைகளிலும் யாரும் அவ்வளவு எளிதாக பல லட்சங்களையோ, கோடிகளையோ எடுக்க முடியாது. அப்படி லட்சங்களை, கோடிகளை எடுத்தால் அந்தப் பணம் யாருக்குப் போகிறது, எப்படி விநியோகமாகிறது என வங்கிகளிலிருந்து தேர்தல் கமிஷனின் பண விநியோகத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகளுக்குத் தகவல் போய்விடும். அந்தப் பணம் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்கிற சந்தேகம் தேர்தல் கமிஷனுக்கு வந்தால் உடனடியாக அந்தப் பண பரிமாற்றம் தடை செய்யப்படும். அத்துடன் வருமானவரித்துறையின் அமலாக்கப் பிரிவு களத்தில் இறங்கும். ரெய்டு, கைது என நடவடிக்கைகள் பாயும். அதிகபட்சமாக பண விநியோகம் எந்த சட்டமன்றத் தொகுதியில் நடந்ததோ அங்கு தேர்தல் நிறுத்தப்படும். இதுதான் தேர்தலில் பண நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த... தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மேற்கொள்ளும் நடவடிக்கை'' என்கிறார்கள் தேர்தல் கமிஷன் அதிகாரிகள்.""பண விஷயத்தில் தேர்தல் கமிஷன் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் வருமான வரித்துறை மற்றும் ரிசர்வ் வங்கியால் கண்காணிக்கப்படுகிறது. 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் மொத்தமாக பத்தாயிரம் கோடி ரூபாய் பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளது என அறிவித்த ரிசர்வ் வங்கி, தமிழகத்தில் எவ்வளவு பணப் புழக்கம் இந்தத் தேர்தல் மூலமாக ஏற்பட்டது என தீவிரமாக ஆராய்ந்தது. தமிழக வங்கிகளில் வழக்கமாக நடக்கும் பண பரிவர்த்தனைகள்தான் நடந்துவந்தது. ஆனால் தமிழகத்திற்கு பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளில் வழக்கத்தை விட மிகமிக அதிகமாக லட்சங்களும், கோடிகளும் பதுங்கியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது. கர்நாடகாவில் தற்பொழுது தேர்தல் எதுவும் நடைபெறவில்லை. அங்கே தேர்தல் கமிஷனோ, வருமானவரித்துறையோ பண பரிமாற்றங் களை ஆராய்வதில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கோடிக்கணக் கான ரூபாய் கர்நாடகத்தில் உள்ள வங்கிகளில் உள்ள கணக்குகளில் செலுத்தப்படுகிறது. அந்தக் கோடிகள் கர்நாடகம் தமிழகத்தோடு இணையும் எல்லைப் பகுதிகளான ஓசூர், மைசூர் மற்றும் கேரள மாநிலம் தமிழகத்தோடு இணையும் சில பகுதிகளில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாறியிருக்கிறது என ரிசர்வ் வங்கி கண்டுபிடித்துள்ளது'' என்கிறார்கள் ரிசர்வ் வங்கி அதிகாரிகள். அந்தப் பணம் எங்கே போனது என மத்திய அரசின் உளவுத்துறையிடம் கண்டுபிடிக்க உத்தரவிட்டார்கள். ""பணத்தைத் தேடிப்போன மத்திய உளவுத்துறை ஒரு அதிர்ச்சிகரமான ரிப்போர்ட் டை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் நஜீம் ஜைதியிடம் கொடுத்திருக்கிறது. மொத்தம் 4,000 கோடி ரூபாய் அளவிற்கு தமிழக நேரடி எல்லைகளில் உள்ள வங்கிகளிலிருந்து தமிழக தேர்தல் களத்திற்குச் சென்றிருக்கிறது. இரு மாநில எல்லைப் பகுதிகளிலிருந்து அரசாங்க பேருந்துகள், ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வண்டிகள் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்கிற ரிப்போர்ட் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை டென்ஷன் அடைய வைத்துள்ளது. அடுத்து என்ன செய்வது என அடுத்தகட்ட நடவடிக்கைகள் மூலம் பண விநியோகத்தை தடுப்பது எப்படி என தேர்தல் ஆணையம் ஆலோசனையில் இறங்கியுள்ளது'' என்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.""தமிழகத்தில் டி.ஜி.பி., கலெக்டர்கள் உட்பட பல்வேறு அதிகாரிகள் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்பதற்காகத்தான் மத்திய தேர்தல் ஆணையம் மாற்றியது. அந்த மாற்றத் திற்குப் பிறகும் தமிழகத் தேர்தலில் விளையாடும் பண பரிமாற்றங்களும் குறையவில்லை என்பதால், மத்திய தேர்தல் கமிஷனின் இணை கமிஷனர் உமேஷ் சின்ஹாவை உடனடியாக சென்னைக்கு அனுப்பியது. அவர் தமிழகம் முழுவதும் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளின் மீட்டிங் ஒன்றை நடத்தி முடித்ததோடு "அடுத்தவாரம் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியே நேரில் வருகிறார்' எனச் சொல்லிவிட்டுச் சென்றார்'' என்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள். ""தலைமைத் தேர்தல் ஆணையம்தான் கண்காணிப் பாக செயல்படுகிறது. தமிழகத் தில் தேர்தல் ஆணையம் செயல்படவே இல்லை. அத னால்தான் 4,000 கோடி ரூபாய் டிரான்ஸக்ஷன் விவகாரத்தை கோட்டை விட்டுள்ளது'' என்கிறார்கள் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
அ.தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படுகிறார் கள் என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் மாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதி காரிகள் யாருக்கும் வேறு போஸ்டிங் போட வில்லை. அனைவரையும் காத்திருப்போர் பட்டிய லில் தமிழக தேர்தல் ஆணையம் வைத்திருக்கிறது. இது புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகளை செயல்பட விடாமல் செய்துள்ளது. மாற்றப்பட்ட அதிகாரிகளிடம் முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ""கவலைப்படாதீர்கள், மறுபடியும் அ.தி.மு.க. ஆட்சி வரும்... உங்களுக்கு நல்ல போஸ்டிங் கிடைக்கும்'' எனச் சொல்லி வருகிறாராம். ""ஷீலா பாலகிருஷ்ணன் சொல்வது போலத்தான் தமிழக தேர்தல் ஆணையாளர் ராஜேஷ் லக்கானியின் செயல்பாடுகள் இருக்கின்றன. அதேபோல் பூஜா குல்கர்னி, வெங்கடேஷ் போன்றவர்களை அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளுக்கு மாற்றாக நியமித்துள்ளார் ராஜேஷ் லக்கானி. கரூரில் போலி ஆம்புலன்ஸ் + 5 கோடி பணத்துடன் சிக்கிய நத்தம், ஓ.பி., வைத்தி ஆகியோரின் பினாமியான அன்பு நாதனை போலீசார் விசாரிக்கக்கூட செய்யவில்லை. அவரது முன்ஜாமீன் மனுவை எதிர்த்து வாதிட ஒரு வழக்கறிஞரைக் கூட தமிழக தேர்தல் கமிஷன் கோர்ட்டுக்கு அனுப்பவில்லை'' என்கி றார்கள் அதிகாரிகள்.""கரூர் அன்புநாதன் சிக்கியதற்குப் பிறகு தமிழக தேர்தல் கமிஷன் ஒட்டு மொத்தமாக பெரிய அளவு சோதனைகள் எதையும் நடத்தவில்லை. அதனால் கர்நாடக வங்கிகளில் இருந்து எடுக்கப்பட்ட 4,000 கோடி ரூபாய் தமிழகம் முழுவதும் சென்று சேர்ந்துள்ளது. அதைத் தடுக்க எந்த வழிமுறையும் இல்லாமல் கோட்டைவிட்டது தேர்தல் ஆணையம்'' எனச்சொல்லும் அதிகாரிகள், ""போயஸ் கார்டனிலிருந்து அதிகாரிகளின் மாற்றத்திற்கு எதிர்ப்பு வந்ததும் ராஜேஷ் லக்கானி அமைதியாகிவிட்டார்'' என்கிறார்கள்.இந்த நிலைமையை சாதக மாக்கிக்கொண்ட போயஸ் கார்டன் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு புதிய தேர்தல் பொறுப் பாளரை நியமித்த கையோடு பண விநியோகத்தையும் தொடங்கி விட்டது. கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் பண விநியோகம் பற்றி ராஜேஷ் லக்கானியிடம் புகார் சொன்ன தி.மு.க.வின் டி.கே.எஸ். இளங்கோவன் உடனடியாக டெல்லிக்குச் சென்று இந்திய தேர்தல் ஆணையரான நஜீம் ஜைதியிடம் அ.தி.மு.க.வின் பண விநியோகம் பற்றி புகார் தெரிவித்துவிட்டு வந்தார்.ஆனால் அண் ணாநகர் உள்ளிட்ட பல தொகுதிகளில் பண விநியோகம் தடபுடலாக டோக் கன் சிஸ்டத்துடன் நடக்கிறதாம்."தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை மாற்றினால்தான் தமி ழகத்தில் தேர்தல் நியாயமாக நடை பெறும் என தி.மு.க. கோரிக்கை வைக்க தயாராகி வருகிறது' என்கிறார்கள் உடன்பிறப்புகள். அதற்குள் தமிழகம் முழுவதும் பண விநியோகத்தை முடித்துவிட களத்தில் வேகமாக இறங்கியுள்ளது அ.தி.மு.க.
-தாமோதரன் பிரகாஷ் nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக