இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை,
ஆகவே பெண்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறி
சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகை ப்ரியாமணி. பருத்திவீரன் படத்தின்
மூலமாக தேசிய விருது பெற்றவர் ‘முத்தழகு’ ப்ரியாமணி.
தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்த ப்ரியாணி, தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார்.
விரைவில் ப்ரியாமணி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். தற்போது விஜய் டிவியில் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர்
கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா என்பவர் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை
ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை ப்ரியாமணியும் தன் பங்கிற்கு கோபத்தை
வெளிப்படுத்தியிருக்கிறார்.
ப்ரியாமணி தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது…”மீண்டும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்ற செய்தியை படித்ததும் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
ஜிஷாவிற்கு நியாயம் வேண்டும். இந்தியாவில்
இனி பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று நினைக்கிறேன், எனவே பெண்கள்
இந்தியாவை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வாழுங்கள் என்று
கூறியுள்ளார்.
ப்ரியாமணியின் இந்த கருத்திற்கு ஒருபக்கம்
ஆதரவு இருந்தாலும் மற்றொரு பக்கம் சர்ச்சையையும் கிளம்பியுள்ளது. ஏற்கனவே
நடிகர்கள் ஷாரூக், அமீர்கான் போன்ற நடிகர்கள் இதுபோன்ற ஒரு கருத்தை கூறி
சர்ச்சையில் சிக்கிய நிலையில், இப்போது ப்ரியாமணியும் இந்தியா
பாதுகாப்பில்லை என்று கூறியிருப்பது அவர் மீதான அதிருப்தியையும்,
சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
இதனால் ப்ரியாமணி தன் டுவிட்டரில் இதற்கும் விளக்கம் அளித்துள்ளார். அதில், ”ஒரு போதும் இந்தியாவிற்கு எதிராக நான் கருத்து தெரிவிக்கவில்லை, என்னுடைய பதிவை சரியாக பாருங்கள்” என்று கூறியுள்ளார் தினமணி.com
இதனால் ப்ரியாமணி தன் டுவிட்டரில் இதற்கும் விளக்கம் அளித்துள்ளார். அதில், ”ஒரு போதும் இந்தியாவிற்கு எதிராக நான் கருத்து தெரிவிக்கவில்லை, என்னுடைய பதிவை சரியாக பாருங்கள்” என்று கூறியுள்ளார் தினமணி.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக