முன்பெல்லாம் தொலைக்காட்சிகளில் அரசியல் விவாதம் என்பது ஆடிக்கொரு முறை
அமாவசைக்கு ஒரு முறை நடக்கும். இதுபோன்ற விவாதங்களில் கலந்துகொள்ள அரசியல்
கட்சி தலைவர்களிடையே போட்டா போட்டியே இருந்ததுண்டு.
ஆனால்-
சமீபமாக பெருகிவிட்ட தனியார் செய்தி தொலைக்காட்சிகளுக்கு தினமும் ஏதோ
விவாதம் நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வருடம் முழுக்க
விவாதம் என்பதால் தொலைக்காட்சியில் தோன்றுவதற்கான மவுசும் குறைந்துவிட்டது.
இதுபோன்ற விவாதம் ஒன்றில் அதிமுக பொறுப்பிலிருந்த நாஞ்சில் சம்பத்,
ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி தோன்றுமளவுக்கு உளறித் தள்ளிவிட்டதால்,
அவரது பதவி பறிபோனது. அதிலிருந்து அதிமுகவினர் தொலைக்காட்சி விவாதங்களில்
தோன்றுவதை முடிந்தவரை தவிர்த்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் பேசுவதற்கு
ஆளில்லாததால் தேமுதிகவிலிருந்து ஆளுங்கட்சி அபகரித்த எம்.எல்.ஏ.க்கள்,
அதிமுக ஜால்ரா அமைப்புகளின் தலைவர்களை வைத்து விவாதங்களை தொலைக்காட்சிகள்
ஒப்பேற்றிக் கொண்டிருக்கின்றன.
அது போலவே, பிரதான எதிர்க்கட்சியான தேமுதிகவும் விவாதங்களுக்கு தங்கள் கட்சியினரை அனுப்புவதில்லை.
எனவே, ஒரு பிரச்சினையில் எந்த தரப்பை பேசவேண்டும் என்றாலும் சம்மதித்து உரையாற்றக் கூடிய தேங்காய் மூடி பாகவதர்களுக்கு செமத்தியான கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. தொலைக்காட்சி நிறுவனங்களும் வேறு வழியின்றி தங்கள் நேயர்களின் நேரப்பசியை போக்க இவர்களை ஒப்புக்கு சப்பாணியாக பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர் என்று விதவிதமாக கவர்ச்சியான பட்டங்கள் கொடுத்து விவாதங்களை நடத்துகிறார்கள். இந்த பலவீனத்தை மறைக்க நெறியாளரே நிரம்ப நேரம் பேசி ‘விவாதம்’ மாதிரியான தோற்றத்தை எப்படியோ உருவாக்கி விடுகிறார்கள்.
இந்த உண்மை புரியாமல் இந்த உப்புமா பாகவதர்கள் கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு, சில பேர் விமானம் பிடித்தும் சென்னைக்கு வந்து விவாதங்களில் கலந்துக் கொள்கின்றனர். பார்க்கும் பார்வையாளர்களோ, “நமக்குத் தெரிஞ்சது கூட இவங்களுக்கு தெரியலையே?” என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.
தேர்தல் நெருங்க நெருங்க உப்புமாக்களின் கால்ஷீட்டுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது Yuva Krishna facebook

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக