வெள்ளி, 6 மே, 2016

பாலியல்...கொடூரமாக கொல்லப்பட்ட பெண்: கொந்தளிக்கும் கேரள மாநிலம்... வீதியில் இறங்கி போராடும் மக்கள்


இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவை உலுக்கி எடுத்துவருகிறது. அடுத்தடுத்து ‌அங்கு நடந்த பாலியல் கொடுமைகளை கண்டித்து""பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொல்லப்பட்ட பெண்: கொந்தளிக்கும் கேரள மாநிலம்... வீதியில் இறங்கி போராடும் மக்கள்" இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவை உலுக்கி எடுத்துவருகிறது. அடுத்தடுத்து ‌அங்கு நடந்த பாலியல் கொடுமைகளை கண்டித்து அந்த மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

கொல்லப்பட்ட தன் மகளை எண்ணி இந்த தாய் குமுறி அழுவதை கண்டு தானும் கண்கலங்கி நிற்கிறார் கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்தலைவர் விஎஸ் அச்சுதானந்தன். சம்பவம் நடந்து இத்தனை நாட்களாகியும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார் அச்சுதானந்தன்

வி.எஸ். அச்சுதானந்தன்,‌எதிர்க்கட்சித் தலைவர் இது பற்றி கூறியதாவது: ;சம்பவம் நடந்து 5 நாட்களுக்குப்பிறகுதான் விசாரணை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. மோசமான பாலியல் வன்கொடுமையும், கொலையும் நடந்தது தெரிந்தும் முதலமைச்சரும், காவல்துறையும் ஒரு நடவடிக்கையும் எடுக்காததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக கூறுகிறார் என்றால், இருக்கட்டுமே. நடவடிக்கை எடுத்தால் சந்தோஷம்தானே. அப்படி ஒரு தகுதியான முதலமைச்சர் ஆட்சியில் இருக்கிறார் என்றால் இதுபோன்ற கொடுமைகள் நடந்திருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
இடதுசாரி ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஜாக் தாமஸ் கூறுகையில், கேரளாவில் மயக்கமருந்து கும்பலைச்சேர்ந்தவர்கள் நடமாடுகிறார்கள். கொலையாளிகள் வெளியே திரிகிறார்கள். தொடர்ந்து குற்றங்கள் நடக்கின்றன. அதேநேரம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். இத்தனைக்கும்பிறகும் நடவடிக்கை எடுக்காத அரசும், காவல்துறையினரும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தாமல் என்ன செய்கிறார்கள். ? என்றார்.
இந்த உணர்வுதான் கேரளா முழுவதும் பரவி இருக்கிறது. திருவனந்தபுரம், கொச்சி, கொல்லம் உட்பட கேரளாவின் பல்வேறு இடங்களிலும் பெண்ணுரிமை அமைப்புகளும், கம்யூனிஸ்டுகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். பெரும்பாவூரில் காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் முன் இடதுசாரி ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஏப்.28-ல் நடந்த பாலியல் வன்கொடுமை கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பெரும்பாவூர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. 30 வயதான சட்டம் படித்த இளம் பெண் வீட்டில் தனியாக இருந்தநேரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இரும்புக்கம்பியால் குத்திக்கிழித்து அந்த பெண்ணின் உள்ளுறுப்புகள் சிதைத்து வெளியே இழுக்கப்பட்ட நிலையில். உடல் முழுவதும் 20க்கும் அதிக இடங்களில் மோசமான காயங்களுடனும் ரத்தவெள்ளத்தில் கிடந்த மகளை கண்ட தாயின் கதறல் இன்னமும் ஓயவில்லை. வேலை முடிந்து வீடு திரும்பியபோது தனது மகளை இந்தநிலையில் காணநேர்ந்த அந்த தாய்க்காகவும், இளம்பெண்ணின் கொடூர மரணத்திற்காகவும் குமுறுகிறது கேரளா.

பெரும்பாவூர் சம்பவம் நடந்த அடுத்தநாளே வர்க்கலாவில் 19 வயது நர்சிங் மாணவி ஒருவர் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவமும், பள்ளி மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவமும் அடுத்தடுத்து நடந்ததால் கேரளாவில் பெண்களும், பொதுமக்களும் போராட்டக்களம் இறங்கி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே பாலியல் வன்கொடுமை விவகாரம் மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்டது. இந்த சூழலில், கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நிதி உதவியும், அவரது தங்கைக்கு வேலையும் வழங்குவதாக கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார். puthiyathalaimurai.com

கருத்துகள் இல்லை: