மாநிலங்களவை எம்.பி-யாக பரிவார் தலைவர் பிரணவ் பாண்டியா நியமனம்"
அகில உலக காயத்திரி பரிவார் என்ற
அமைப்பின் தலைவரான பிரணவ் பாண்டியாவை மாநிலங்களவை உறுப்பினராக ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி நியமித்துள்ளார். பிரணவ் பாண்டியா, ஹரித்துவாரைத் தலைமையிடமாக கொண்ட அகில
உலக காயத்திரி பரிவார் என்ற அமைப்பின் தலைவராக உள்ளார்.
மேலும் பாண்டியா, தேவ் சன்ஸ்கிரிதி விஷ்வவித்யாலாவின் தலைவராகவும், பிரம்மவர்சாஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார்.
கடந்த சில தினங்களில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட 7-வது நபர் பாண்டியா. முன்னதாக கடந்த ஏப்ரல் 22-ம் தேதி மலையாள நடிகர் சுரேஷ் கோபி, சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்ட 6 பேரை மாநிலங்களவை எம்.பி-க்களாக ஜனாதிபதி நியமித்தார்.< உண்மையில் பாண்டியா ஒரு மருத்துவர். குரு பண்டிட் ஸ்ரீராம் சர்மாவிற்கு அடுத்தபடியாக இந்திய கலாச்சாரத்தை உலகிற்கு பறைசாற்ற தன்னை அற்பணித்து கொண்டார் என்று கூறப்படுகிறது.webdunia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக