வெள்ளி, 6 மே, 2016

196 தொகுதிகளுக்கான கருத்து கணிப்பு முடிவுகள் : திமுக 124 , அதிமுக 67 பாமக 2, தேமுதிக, பாஜக தலா ஒரு இடத்தில் வெற்றி..

சென்னை: நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலத்தை போலவே வடக்கு மண்டலத்திலும் திமுகவே அதிக தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்புகளை மண்டலவாரியாக வெளியிட்டு வருகின்றனர்.
 முதலில் மேற்கு மண்டல கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டனர். இதையடுத்து 
தெற்கு மண்டல முடிவுகள் வெளியாகின. 
அதன்பின்னர் கிழக்கு மண்டல முடிவுகள் நேற்று வெளியாகின. 
 
மேற்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் திமுகவுக்கு 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், 24 தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. 
 
இதேபோல தெற்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் திமுகவுக்கு 30 தொகுதிகளிலும், அதிமுகவுக்கு 24 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று வெளியான கிழக்கு மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளில் திமுகவுக்கு 30 இடங்கள் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 9 தொகுதிகளில் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
இந்த மண்டலத்தில் பாமகவுக்கு இரண்டு தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் இன்று வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 41 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் திமுக 31 தொகுதிகளிலும், அதிமுகவுக்கு 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுவரை முடிந்துள்ள கருத்துக் கணிப்புகளில் மொத்தம் 196 தொகுதிகளுக்கு முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக 124 இடங்களிலும், அதிமுக 67 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. 
 
மேலும் பாமவுக்கு 2 தொகுதிகளிலும், தேமுதிக, பாஜக தலா ஒரு இடத்தில் வெல்லும் என்றும், ஒரு தொகுதியில் திமுக - அதிமுக இடையே சம நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டல முடிவுகள் விவரம்: 
 
திருவண்ணாமலை மாவட்டம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் அதிமுக 2 தொகுதியிலும், திமுக 6 தொகுதியில் வெல்லும் வாய்ப்பு
வேலூர் மாவட்டம்: வேலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் திமுக கூட்டணி 7 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும், அதிமுக கூட்டணி 6 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு . 
விழுப்புரம் மாவட்டம்: விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் திமுக கூட்டணி 10 தொகுதிகளை வெல்லும் எனவும், அதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைக்கும்
கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் திமுக 8 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாகவும், அதிமுகவுக்கு ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-lead-north-zone-news7-dinamalar-survey-252944.html

கருத்துகள் இல்லை: