வெள்ளி, 6 மே, 2016

ராஜேஷ் லக்கானி .. இன்றைய மிகப்பெரிய அரசியல்வாதி? நேற்று பிரவீன் குமார்?

விகடன்: தேர்தலில் கண்ணியமாக வாக்களிக்க உறுதிமொழி எடுப்பதற்காக வரும் 10ம் தேதி ஒரு கோடி பேர் பங்கேற்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.இது தொர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏற்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 100 சதவீதம் கண்ணியமாக வாக்களிக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுக்கமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டதோடு, பொதுமக்களும் ஓட்டுக்குப் பணம் பெறாமல் நடுநிலைமையோடு சிந்தித்து நேர்மையாக வாக்களிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முதல்ல நீங்க அந்த   உறுதி மொழியை எடுங்க. நேர்மையாக  பணப்பட்டு வாடாவை  தடுங்க... ஜெயா விசுவாசம் போதும் 
பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க எந்த வேட்பாளரிடமிருந்தும் பணமோ, அல்லது பரிசு பொருட்களோ பெறாமல் கண்ணியமாக வாக்களிப்போம் என்று இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டு தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்தலில் கண்ணியமாக வாக்களிக்கும் வகையில் அனைவரும் 10.05.2016 அன்று காலை 10 மணிக்கு உறுதிமொழியினை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கோடி மக்கள் இந்த உறுதிமொழி எடுத்துக்கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள், வங்கிகள், சுயஉதவி குழுக்கள், வியாபாரிகள் சங்கம், அனைத்து மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், வணிகர் சங்கங்கள் ஆகியவை இந்த உறுதிமொழியை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலும், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற தொண்டு நிறுவனங்கள் அந்தந்த அமைப்புகளிலும் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் அவர்களது அலுவலகங்களில் குறைந்தது 100 நபர்கள் கலந்துகொள்ளும் வகையிலும், அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் குறைந்தது 50 நபர்கள் கலந்துகொள்ளும் வகையிலும் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் ஆகியவற்றில் கண்ணியமாக வாக்களிக்கும் உறுதிமொழியினை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்காளர்கள் எப்படி உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. "ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடைய இந்தியக் குடிமகனாகிய நான், என் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் மாண்பையும் நிலைநிறுத்துவேன் என்றும், மேலும் இத்தேர்தலில் அச்சமின்றியும், பணமோ, பொருட்களோ பெறாமலும், எந்தவொரு தூண்டுதலுக்கும் உட்படாமலும் நேர்மையாக சிந்தித்து வாக்களிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன். தேர்தல் விதிமீறல்கள் குறித்த எந்த செயல் பற்றியும் நான் அறிய வந்தால், அதனை தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடைமுறைக்கு உட்படுத்துவேன் என்றும் உறுதி ஏற்கிறேன்" என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை: