செவ்வாய், 3 மே, 2016

ஜெயேந்திரருக்கு நஷ்டஈடு தரவேண்டும்.? சங்கரராமனின் ஆத்மாவிடம் பாவமன்னிப்பு கேட்க சொல்லுங்க....அப்புறம் மறைந்த அனுராதா ரமணனிடமும்

sanka apr 30 ஆந்தை ரிப்போட்டர்::காஞ்சி சங்கரராமன் கொலை வழக்காகட்டும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்காகட்டும், சங்கரமட ஜெயேந்திரரை விடுதலை செய்திருக்கிறது. அரசு மேல்முறையீடு போவதும், போகாததும் வேறு விஷயம். ஆனால் சட்டத்தைப் பொருத்தவரை ஜெயேந்திரரை அநியாயமாக! சிக்க வைத்துவிட்டு விட்டார்கள். அவர் நிரபராதி.!! குற்றம் செய்தார் என்பதற்கான போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை!!! அதனால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இப்போது இரண்டு கேள்விகள் எழுகிறது. அரசு மேல்முறையீடு செய்து, அதிலும் ஜெயேந்திரர் விடுதலை என்று தீர்ப்பானால்…? நிரபராதியான ஜெயேந்திரரை, காவல்துறையும், அதற்கு பொறுப்பாபான அரசும் ‘வேண்டும் என்றே’? சிக்கவைத்திருக்கிறது என்று பொருள். அப்படி எனில் அந்த காவல்துறைக்கும், அரசுக்கும் என்ன தண்டனை?
அடுத்து இன்னொரு கேள்வி. உண்மையான குற்றவாளிகள் யார்? அவர்களை கண்டுபிடிக்க வேண்டுமா வேண்டாமா? சாதாரணமாகவே நேர்மையான நீதிபதிகளை மைக்கிராஸ்கோப்பில்தான் தேடவேண்டி உள்ளது... இவன் வேற காஞ்சி தலைமை பார்ப்பான் நீதி துறையே இவனுக ராச்சியம்தானே? .இவனுக்காக அவாள்( ஆந்தை) என்னாமா அழுவுராள்? கொலை பண்றவாளை  பிரமஹத்தி தோஷம்னோ  பிடிக்கும்.அது  லேசுல விடாது.ஜெயேந்திரனுக்கு சப்போர்ட் பன்றவாளையும் பிரமஹத்தி தோஷம் பிடிக்கும் சந்ததிக்கும் அது தொடரும்லே. 
ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை என்றால் அதோடு போலீஸின் வேலை முடிந்து விடுகிறது. அடுத்த வழக்கை நோக்கி ஓடுவிடுவார்கள். எனில், அந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்கவே மாட்டார் கள்? இதுதான் வழக்கமாக இருக்கிறது. இது எப்படி நியாயம்?
அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை என்றால் அவருக்கு அரசு-காவல் துறை நிவாரணம் தரவேண்டுமா வேண்டாமா? எவ்வளவு மனஉளைச்சலை, அவமானத்தை, கேவலத்தை சந்தித்திருப்பார். சிறையில் இருந்த அவமானம் எல்லாம் எப்படி ஈடாகும். ஆக அதற்கெல்லாம் ஒரு பெரும் தொகையை அரசு நஷ்ட ஈடாக தரவேண்டும். இப்படி ஏதுமே நடப்பதில்லை.
இதற்கு எந்த அரசியல் கட்சியும் ஒரு தீர்வை முன்வைக்கவில்லை. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை தவிர்த்து இதுவரை வந்த அனைத்து கட்சிகள்-கூட்டணிகளின் தேர்தல் அறிக்கைகள் அனைத்தையும் வாசித்துவிட்டேன். குறிப்பிட்டு இப்படி ஒரு தீர்வை முன்வைக்கவில்லை.
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மட்டும் இதற்கு தீர்வை சொல்லியிருக்கிறார்கள்.குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டால் வழக்கை நடத்திய காவல் அதிகாரியின் சம்பளத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்து, கூடவே அரசும் பெரும் தொகையை ஒதுக்கி ‘வீன்பழிசுமந்தவருக்கு’ நஷ்ட ஈடாக வழங்குவோம் என்கிறது நாம் தமிழர் கட்சி. அதே நேரத்தில் அந்த வழக்கில் வெற்றி பெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் என வழங்கப்படும் என்கிறார்கள்.
அது மட்டுமின்றி உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடித்தே ஆகவேண்டும். அதுவும் காவல்துறையின்- சம்பந்தப்பட்ட அதிகாரியின் பொறுப்பு என்கிறது அந்த கட்சியின் அறிக்கை.
இப்படி இருந்தால் பொய் வழக்கு போடமாட்டார்கள்தானே?
பா. ஏகலைவன்

கருத்துகள் இல்லை: