திங்கள், 2 மே, 2016

தினமலர்.:ஆளுங்கட்சியை அதிரவைத்த ரிப்போர்ட்.....எல்லாம் சரியாதானே போச்சுது....அப்படி நீங்களே கற்பனை பண்ணினா?

கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரிகளையே காணோம்' - இது கடந்த லோக்சபா தேர்தலின்போது, எதிர்க்கட்சிகளை ஏளனமாக பார்த்து, ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள். தேர்தலுக்கு முன் நடந்த கட்சி பொதுக் குழுவிலும், இதே வார்த்தைகளை பிரயோகித்தார். தேர்தல் பிரசாரத்தின் போதும் உரக்கச் சொன்னார்.
தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகள் பிரிந்து கிடக்க, பா.ஜ., தலைமையில், ஒரு வலுவான அணி உருவானது எல்லாமே ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருக்க, அந்த தேர்தல் முடிவுகள், ஜெ., வார்த்தைகளை நிஜமாக்கின.பா.ஜ., அமைத்த கூட்டணியில் மட்டும், இருவர் வெற்றி பெற்று விட, மற்ற எல்லா தொகுதிகளையும் அப்படியே அ.தி.மு.க., அள்ளியது. 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு, இந்தியாவிலேயே அதிகமான இடங்களில் வெற்றி பெற்ற கட்சிகளில், மூன்றாவது இடத்தைப் பெற்றது. இதனால், ஒட்டுமொத்த இந்தியாவே, ஜெயலலிதாவை பார்த்து வியந்தது.  இதெல்லாம் சும்மா முதல்வர் வேட்பாளர் சும்மா செவச் செவன்னு செவையேன்னு இருந்தா போதும்ன்னு ஒட்டு போடுற மஞ்ச மாக்கான் அடிமைக இருக்குறவரைக்கும் இந்த கட்சி எந்த ரிப்போர்ட்டையும் கண்டுக்காது



லோக்சபாவில், அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர் களை கொண்டிருந்ததால், தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. பலனாக, துணை சபாநாயகர் பொறுப்பு அ.தி.மு.க.,வுக்கு வழங்கப்பட்டது. இதனால்,தமிழகத்தில் தன்னை விட பெரிய சக்தி எதுவும் இல்லை என்ற எண்ணம், அக்கட்சித் தலைமைக்கு முளைத்தது.எனவே, தற்போதைய சட்டசபை தேர்தலுக்கும், எந்த பெரிய கட்சியுடனும் கூட்டணி இல்லை என முடிவெடுத்தார்;
அதன்படி, சில சிறிய கட்சிகளை மட்டும் அரவணைத்து, அவற்றையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏற்பாடு செய்து, வேட்பாளர்களை அறிவித்தார்.

அவரின் இந்த அதீத நம்பிக்கை, அவர், பிரசாரத்திற்கென வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, குறையத் துவங்கியது. லோக்சபா தேர்தல் நேரத்தில் இருந்த, அ.தி.மு.க., மீதான ஈர்ப்பு இப்போது இல்லை என்பதை, தன் முதல் பிரசாரத்திலேயே ஜெயலலிதா தெரிந்து கொண்டார். இப்போது, மூத்த தலைவர்கள் சிலரை அழைத்து, என்ன செய்தால் மாற்றம் ஏற்படும் என விவாதித்து வருகிறார். அதைத் தொடர்ந்து, எதார்த்தத்தை மையப்படுத்தி, சில விவரங்களை அறிக்கைகளாக, முதல்வருக்கு அவர்கள் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள்:
*அ.தி.மு.க., சார்பில் தேர்ந்தெடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் பலருக்கும், கட்சியில் கடும் எதிர்ப்பு உள்ளது
*வேட்பாளர்களில் பலரும் ஏற்கனவே எம்.எல்.ஏ.,க்களாக இருந்து, மக்கள் பணி செய்யாததால், மக்களின் கடும் எதிர்ப்பை
பிரசாரத்தில் சந்தித்து வருகின்றனர். பல இடங்களில் பிரசாரத்திற்காக, ஊருக்குள்ளேயே அவர்கள் போக முடியாத சூழ்நிலை உள்ளது* த.மா.கா., போன்ற கட்சிகளை கூட்டணிக்குள் வைத்திருக்காமல், அவர்களை கடைசி வரை அவமானப் படுத்தி அனுப்பி வைத்தது தவறு
*ஆங்காங்கே இருக்கும் உளவுத் துறை அதிகாரிகள், கட்சிக்காரர்கள் சிலரிடம் விலை போய், அதற்கேற்ப, தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளதால் வேட்பாளர் தேர்வில் தவறு நடந்திருக்கிறது
*ஒதுக்கி வைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கே.பி.முனுசாமி போன்றவர்களுக்கு மீண்டும்,
'சீட்' கொடுத்தது தவறு *அதேபோல், நால்வர் அணியில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்த பின், அவர்களுக்கும், அவர்கள் ஆதரவாளர் என்ற காரணத்திற்காக, ஓரங்கட்டப்பட்ட சண்முகநாதன், மோகன் போன்ற அமைச்சர்களுக்கும் மீண்டும்,
'சீட்' கொடுத்திருக்க வேண்டாம். இவ்விவகாரம், கட்சியில் எல்லாமே ஏடாகூடமாக இருப்பதாக, பொதுமக்கள் கருத இடம் அளித்து விட்டது

  பழைய தலைவர்களுக்கு, அவர்கள் வெற்றி பெறக் கூடிய தொகுதியைக் கொடுக்காமல் மாற்றிக் கொடுத்துள்ளது, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்*வேட்பாளர்கள் நிறைய பேரை, மாற்றியபடி இருந்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
*முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த முறை, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உள்ளடி வேலை நடக்கிறது
*முதல்வரின் பிரசாரம் எடுபடவில்லை. ஏற்கனவே சட்டசபை மற்றும் பத்திரிகை வாயிலாக பரப்பப்பட்ட, ஆட்சியின், 110வது விதி சாதனைகளையே படிப்பதால், மக்கள் மத்தியில் பிரசாரத்துக்கு ஈர்ப்பில்லை
*ஹெலிகாப்டர் மூலம் பிரசாரத்திற்கு செல்வது, முதல்வர் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
*கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கும் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளதால், தமிழகம் முழுவதும் பிரசாரத்தை ஒருங்கிணைக்க ஆளில்லாமல் போய்விட்டது
*கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு, எந்த இடத்திலும் முக்கியத்துவம் இல்லாததால், கட்சியினர் யாரையும் யாரும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இப்படி பல விஷயங்களை பட்டியலிட்டு, முதல்வர் பார்வைக்கு அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் இரு வாரமே மிச்சம் இருக்கிற நிலையில், ஜெயலலிதா நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுமா?

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: