In an interview with Bloomberg, Google Ventures' president Bill Maris said he thinks it's possible to live to 500 years old
மனிதர்களின் வாழ்நாளை அதிகப்பட்சமாக 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என கூகுளின் புதிய ஆய்வுகளுக்கான தலைமை அதிகாரி பில்மார்ஸ் தெரிவித்துள்ளார். > கூகுள் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறை தவிர மற்ற பிற துறைகளிலும் பெரும் முதலீடுகளை செய்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக மரபணு, புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் மனிதர்களின் வாழ்நாளை அதிகரிப்பது அதாவது முதுமையை தடுக்கும் துறைகளில் அதிக கவனம் செலுத்திவருகிறது. இந்த ஆய்வுகளை தலைமையேற்று நடத்திவரும் பில் மார்ஸ் தங்கள் ஆய்வு பற்றி கூறுகையில், "மனிதர்களின் வாழ்நாட்களை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம். சாவை தடுக்க முடியாது. ஆனால், கண்டிப்பாக நீண்ட நாட்கள் வாழ வைக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இதற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. இதுவரை மனிதர்களின் ஆயுளை 120 ஆண்டுகள் வரை நிச்சயமாக நீட்டிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறி வந்த நிலையில், கூகுள் அதை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக