இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர்
மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். இந்த சந்திப்பு அதிபரின் அலுவலகத்தில்
நடைபெற்றது.
இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஈழத்தமிழர் விவகரம், மீனவர் பிரச்சனை உள்ளிட்ட
முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சரவை
அமைச்சர்களும் பங்கேற்றனர்.
4 ஒப்பந்தங்கள் கையெழுத்து:
சந்திப்புக்குப் பின்னர், சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
முன்னிலையில் விசா நீடிப்பு, சுங்கத்துறையில் ஒத்துழைப்பு, இலங்கையில்
தாகூர் கலையரங்கம் கட்டுவது உள்ளிட்ட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகியுள்ளன. இருநாட்டு அதிகாரிகளும் ஒப்பந்தங்களில்
கையெழுத்திட்டனர்.
பின்னர், இலங்கை அதிபரும், இந்தியப் பிரதமரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மோடி பேசும்போது: "இலங்கைக்கு வருகை தந்ததை எண்ணி மகிழ்ச்சி
அடைகிறேன். 1987-க்குப் பிறகு இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வந்திருப்பது
ஒரு வரலாற்று சிறப்புமிக்கது.
இலங்கை அதிபருடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த
சந்திப்பின் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான எதிர்கால உறவு சிறப்பாக அமையும்
என்ற புதிய நம்பிக்கை உதயமாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுடன், உறவைப் பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரலாறு மற்றும் மத ரீதியாக இந்தியா - இலங்கை நெருங்கிய நட்பு கொண்டவை.
இந்தியா - இலங்கை இடையே தொடர்ந்து உறவை வலுப்படுத்த இரு நாட்டுத்
தலைவர்களும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது அவசியம்.
டெல்லியில் இருந்து கொழும்புவுக்கு நேரடியாக விமான சேவை தொடங்கப்படும்.
இலங்கைப் பயணிகள் இந்தியா வந்ததும் விசா வழங்கும் முறை ஏப்ரல் 14-ம் தேதி
முதல் அமல்படுத்தப்படும்.
இருநாட்டு மீனவர் பிரச்சினையில் வாழ்வாதாரம், மனிதாபிமான கோணங்களும்
பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண சிறிது காலம்
ஆகும். இருநாடுகளும் இணைந்து நீண்டகாலத் தீர்வைக் காண்பது அவசியம்.
இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவதிலும், இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை
வழங்குவதிலும், 13-வது சட்டத்திருத்தை அமல்படுத்துவதிலும் இந்தியா
இலங்கைக்கு துணை நிற்கும்.
இலங்கையில் எவ்வளவு விரைவாக 13-வது சட்ட திருத்தம் அமல்படுத்தப்படுகிறதோ
அவ்வளவு சீக்கிரமாக அங்கு நீதியும், சமத்துவமும் மலரும்" என்று தெரிவித்தா /tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக