செவ்வாய், 10 மார்ச், 2015

அக்ரி கிருஷ்ணமூர்த்தி லஞ்ச விவகாரம் அதிமுகவின் அத்திவாரத்தையே பீஸ் பீசாக்குகிறது? லஞ்சம் அம்மா பஜனை அபிஷேகம் ஆராத்தி காவடி டாஸ்மார்க் .....

திருநெல்வேலி: 'நெல்லையில், வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியிடம், 21 லட்சம் ரூபாய் கேட்டு, கடுமையாக மிரட்டியது தான், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம்' என, உளவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி, நெல்லையில், வேளாண்மை பொறியியல் துறையில் பணிபுரிந்த முத்துக்குமாரசாமி, 57, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மாவட்டத்தில், ஓட்டுனர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. அப்போதைய, வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த அழுத்தம் தான், அதிகாரி தற்கொலைக்கு காரணம் என, எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. இதையடுத்து, கட்சிப் பதவி மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார்.  அரசு அதிகாரிகள் இன்னமும் இங்கிலாந்து காலத்திலேயே உள்ளனர். ஊழியர்களை அடிமைகளாக நடத்துகின்றனர். இதை பின்பற்றி ஊழியர்களும், மக்களை அடிமைகளாக நடத்துகின்றனர். அமெரிக்காவில் அரசு அதிகாரிகள் எப்படி அரசு ஊழியர்களை நடத்துகிறார்கள் என்று பாருங்கள். ஊழியர்களும் மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்று பாருங்கள்? அடிமை தனம் இல்லை. சமுதாயத்தில் மாற்றம் வரவேண்டும். இது மேலிருந்து வர வேண்டும். அரசியல்வாதிகளிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அவர்களுக்கு தான் எளிமை என்பதே தெரியாதே அதற்கு தான் ஆம் ஆத்மி கட்சி வந்தது. பின்னர், அதன் தலைவர் அரவிந்திற்கே எளிமை பிடிக்காமல் போய்விட்டது.
மேலும், அதிகாரி தற்கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது.எஸ்.பி., அன்பு தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோர், நேற்று விசாரணையை துவக்கினர். என்.ஜி.ஓ., காலனியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள், ஓட்டுனர்கள், ஊழியர்களிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது. மேலும், பலரிடம் விசாரணை நடத்தவும், போலீசார் திட்டமிட்டு உள்ளனர். ரூ.21 லட்சம் பேரம்: உளவுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: நெருக்கடிகளுக்கு பணியாமல், ஏழு ஓட்டுனர்களை, முத்துக்குமாரசாமி நியமித்தார். இதனால், 'ஒரு இடத்திற்கு, 3 லட்சம் ரூபாய் வீதம், 21 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது; இந்தப் பணத்தை, நீ தான் (முத்துக்குமாரசாமி) தர வேண்டும்' என, மேலிடத்தில் இருந்து மிரட்டினர். முத்துக்குமாரசாமியும், தன் வருங்கால வைப்புநிதி, உறவினர்களிடம் கடன் என, 10 லட்சம் ரூபாயுடன் சென்னை சென்றார். ஆனால், 'மொத்தமாக, 21 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, மீண்டும் மிரட்டப்பட்டார்; இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், தற்கொலை செய்து கொண்டார். முத்துக்குமாரசாமியின் மனைவி, தலைமைச் செயலர் ஞானதேசிகனின் உறவினர் என்பதால், வேளாண் அலுவலர் தற்கொலை வழக்கு, விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர். dinamalar.com

கருத்துகள் இல்லை: