வியாழன், 12 மார்ச், 2015

கோவை மாநகராட்சி ! திமுக கவுன்சிலர் மீனாவுக்கு அதிமுக அன்னம்மாளும் இதர கவுன்சில் அடிமைகளும் பயங்கர அடி பிடி


கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் தி.மு.க. - அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தி.மு.க. பெண் கவுன்சிலர் மீனா லோகநாதன் மீது அதிமுக கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் வைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த திமுக கவுன்சிலர் மீனா லோகநாதன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வீரப்போரல்லவா இது? நமக்கு வாய்த்த அடிமைகளில் யார் அதிக விசுவாசம் என்பதை காட்ட நடக்கும் வீர விளையாட்டு இது , நாடு வெளங்கிடும் !

கோவை மாநகராட்சியின் 2015 - 2016 ம் ஆண்டிற்கான பட்ஜெட், மாமன்ற கூட்டத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட்யில் கலந்து கொள்ள வந்த திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகநாதன், கடந்த 2012 முதல் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்   எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதை விளக்கும் விதமாக நெற்றியில் நாமம் போட்டபடி பட்ஜெட்டில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே திமுக அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது அதிமுக கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர் மீனாலோகநாதனை சூழ்ந்து கொண்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர். வாக்குவாதம் முற்றிய நிலையில் 22வது வார்டு அதிமுக கவுன் சிலர் அன்னம்மாள் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் மன்ற அரங்கிலேயே மேயர் ராஜ்குமார் முன்னிலை யில் கடுமையாக தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் மீனா லோகநாதன்  காயமடைந்தார். இந்நிலையில் அதிமுக கவுன்சிலர்களின் பிடியில் இருந்து மீனாலோகுவை மீட்ட திமுக கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்களின் நடவடிக்கையை கண்டித்து மன்ற கூட்டத்தில் இரு ந்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பேட்டியளித்த திமுக கவுன்சிலர்கள், திமுக குறித்து அதிமுக கவுன் சிலர்கள் வெளியிட்ட கருத்துக்கு பதில் தெரிவிக்கவே அதிமுக கவுன்சிலர்கள் ஆத்திரமடைந்து கூர்மையான பொருட்களால் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த மீனா லோகநாதன் மயக்கடையவே உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மன்ற கூட்டத்தில் மீனா லோகநாதன் தாக்கபட்டதை கண்டித்தும் ,பட்ஜெட் மீதான விவாதம் நடத்த போதிய கால அவகாசம் கொடுக்க வலியுறுத் தியும் பா.ஜ.க, தே.மு.தி.க, சி.பி.எம்,காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பிற்பகலில் நடக்கும் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். அனைத்து    கட்சியினரும் பட்ஜெட் விவாத்தினை புறகக்ணித்த நிலையில் பிற்பகல் மூன்று மணியளவில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மோதலை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விகடன்.com

-ச.ஜெ.ரவி
படங்கள்: தி.விஜய்

கருத்துகள் இல்லை: