சனி, 14 மார்ச், 2015

ஆந்திரா சட்டசபையில் நடிகை ரோஜா வெளிநடப்பு ! அங்கன்வாடி பெண்தொழிலாளர் சம்பள உயர்வு கேட்டு .....


ஆந்திராவில் அங்கன் வாடி பெண் ஊழியர்கள் தங்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 13 மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று சட்டசபையில் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
ஆனால் அதற்கு சபாநாயகர் சிவப்பிரசாத் அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று நடிகை ரோஜா பலமுறை வற்புறுத்தியும் அவர் அனுமதி வழங்கவில்லை. இதனால் சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.எல்.எ.க்கள் கோரிக்கை எழுப்பினர்.
இதனால் ஏற்பட்ட அமளியால் சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

சபாநாயகரை கண்டித்து சட்டசபையில் இருந்த ரோஜா வெளிநடப்பு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு மீது சரமாரியாக புகார் கூறினார்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு தெலுங்கானா அரசு சம்பளத்தை உயர்த்தி உள்ளது. அதே போல் ஆந்திராவிலும் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.
பெண்கள் மீது அன்பும், மரியாதையும் உள்ளது என்று கூறி சந்திரபாபு நாயுடு கபட நாடகமாடுகிறார். எதிலுமே வாய் ஜாலம் தான் காட்டுகிறார். தேர்தலின் போது கூறிய பல வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை.
இவ்வாறு நடிகை ரோஜா கூறினார் maalaimalar.com

கருத்துகள் இல்லை: