புதன், 11 மார்ச், 2015

நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்: ராஜ்ய சபாவில்?

புதுடில்லி : நிலம் கையகப்படுத்துதல் மசோதா, நேற்று லோக்சபாவில் நிறைவேறியது. ஆனாலும், ராஜ்ய சபாவில், இந்த மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு கடும் பிரயத்தனம் செய்ய நேரிடும் என, எதிர்பார்க்கப்படுகிறத முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நிலம் கையகப்படுத்துதல் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா வில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சில திருத்தங்களை செய்து, கடந்த ஆண்டு அவசர சட்டமாக அமல்படுத்தியது.அந்த அவசர சட்டமானது, ஏப்ரல், 5ம் தேதிக்குள் பார்லிமென்டில் மசோதாவாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை யெனில், காலாவதியாகி விடும். அதனால், நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது.  உலக மக்கள் தொகையில் 1% மக்கள் உலகத்தின் 98% வளங்களை அனுபவிகின்றனர், இந்த 1% மக்களில் 99.5% மக்கள் தங்கள் சொந்த திறமையால் அடைந்த சொத்துக்கள் இல்லை அவை, தலைமுறையாக வந்தவை (inherited ). இந்த 1% மக்கள், தங்கள் நினைத்தவைகளை எப்பொழுதுமே அடைய தவறுவது இல்லை, இந்த சட்டம் இதற்கு ஒரு உதாரணம்...


இந்நிலையில், கடந்த மாத இறுதியில், 'நியாயமான இழப்பீடு உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படையான தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் திருத்த சட்டம் - 2015' மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மசோதா மீதான விவாதம் துவங்கியது.அப்போது, ஆளும் கூட்டணி யில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என, பல கட்சிகள், மசோதாவுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்தன. மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும், சில கட்சிகளின் எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து, விவசாயிகள் மற்றும் நாட்டின் நலன் கருதி, மசோதாவில் மேலும், சில திருத்தங்கள் செய்ய, மத்திய அரசு தயாராக இருப்பதாக, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

அதன்படி, ஆளும் கூட்டணி கட்சிகளையும், எதிர்க்கட்சிகளை யும் திருப்திப்படுத்த, அதிகாரப்பூர்வமாக, ஒன்பது திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அத்துடன், சட்டத்தில் புதிதாக இரண்டு பிரிவுகளும் சேர்க்கப்பட்டன. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் தரப்பில், கொண்டு வரப்பட்ட, 52 திருத்தங்கள் ஏற்கப்படவில்லை.இதையடுத்து, மசோதா மீதான விவாதம் முடிவடைந்து, நேற்று மாலை ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது, காங்கிரஸ், திரிணமுல் காங்., சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிகள் சபையிலிருந்து வெளிநடப்புசெய்தன. ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனா ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இருப்பினும், லோக்சபாவில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், குரல் ஓட்டெடுப்பில் மசோதா நிறைவேறியது.

முன்னதாக மசோதா மீதான விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசிய, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் கூறியதாவது:காங்கிரஸ் கட்சியினர், இதுவரை விவசாயிகளுக்கு ரொட்டித் துண்டுகளைத் தான் வீசி வந்தனர். விவசாயிகள் உயிரோடு வாழ்வதைத் தான் அவர்கள் உறுதி செய்தனரே அன்றி, அவர்கள் வாழ்வு வளமடைய எதுவும் செய்யவில்லை.ஆனால், புதிய அரசு, விவசாயிகள் வளமாக வாழ்வும், அவர்களின் குழந்தைகள் சிறந்த கல்வியும், இதர வசதிகளும் பெறவும் வழிவகை செய்துள்ளது.இவ்வாறு, பிரேந்தர் சிங் கூறினார்.

லோக்சபாவில், இந்த மசோதா நிறைவேறி விட்டாலும், ராஜ்யசபாவில், ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், எளிதில் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகமே. இருப்பினும், அதற்கான ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில், மத்திய அரசு வட்டாரங்கள் இறங்கி உள்ளன.


முக்கிய திருத்தங்கள் என்ன:



* தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளின் இரு புறமும், ஒரு கி.மீ., தூரத்திற்குள் தான், தொழில் வளாகங்கள் அமைக்கப்படும்.
* தொழிற்வளாகத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, அதனால், பாதிக்கப்படும், விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
* திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, எவ்வளவு குறைந்த அளவுக்கு நிலங்களை வாங்க முடியுமா, அந்த அளவுக்கு தான் வாங்க வேண்டும். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான, விவசாயிகளின் குறைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
* தனி நபர்கள் வர்த்தக ரீதியில், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைக்க, நிலம் கையகப்படுத்துவதை தடை செய்ய ஏதுவாக, 'சமூக உள்கட்டமைப்பு திட்டங்கள்' என்ற பெயரில் அளிக்கப்பட்டிருந்த விலக்கு நீக்கப்படுகிறது.இவை உட்பட, ஒன்பது திருத்தங்கள் அரசால் கொண்டு வரப்பட்டு உள்ளன  தினமலர்.com

கருத்துகள் இல்லை: