செவ்வாய், 10 மார்ச், 2015

உலகின் முதல் சூரிய சக்தி விமானம் பயணத்தை தொடங்கியது


அபுதாபியில் உலகின் முதல் சோலார் விமானம் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டது. இரண்டு பேர் மட்டுமே அமரக்கூடிய இந்த விமானத்தின் 72 மீட்டர் (சுமார் 236 அடி) நீள இறக்கைகளில் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானத்தை வடிவமைப்பதில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த விமானி ஆண்ட்ரே போர் ச்பெர்க் மற்றும் விமானி பெர்ட்ராண்ட் பிக் ஆகியோர் முக்கியப்பங்கு வகித்தனர். 12 வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது நனவாகியிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று விமானிகள் தெரிவித்தனர். ‘சோலார் இம்பல்ஸ்’ 2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சோலார் விமானம் அபுதாபி அல் புத்தீன் நிர்வாக விமான நிலையத்தில் இருந்து நேற்று தனது பயணத்தை தொடங்கியது.


அபுதாபியில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் கடைசி நேர மின் கோளாறு காரணமாக காலை 7.12 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தை விமானி ஆண்ட்ரே போர்ச்பெர்க் மற்றும் விமானி பெர்ட்ராண்ட் பிக் ஆகிய இருவரும் மாறி, மாறி இயக்குகிறார்கள்.

அபுதாபியில் புறப்பட்ட இந்த விமானம் ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிற்கு 10 மணி நேரத்தில் செல்லும். அதன் பின்னர் அங்கிருந்து இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆமதாபாத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறது.

தொடர்ந்து வாரணாசிக்கு செல்லும். அதன் பின்னர் மியான்மர், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற பின்னர் ஜூலை 2015-க்குள் அபுதாபிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது maalaimalar.com

கருத்துகள் இல்லை: