சனி, 14 மார்ச், 2015

கேரளா சட்டசபையில் வரலாறு காணாத ரகளை : சபாநாயகர் இருக்கை தகர்ப்பு


திருவனந்தபுரம்:கேரள சட்டசபையில் நேற்று வரலாறு காணாத அமளி ஏற்பட்டது. மதுபான பார் ஊழலில் சிக்கிய நிதியமைச்சர், கே.எம்.மோனி, 82, மாநில பட்ஜெட்டை சமர்ப்பிக்கக் கூடாது என, முதல்வர் உம்மன் சாண்டியை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதை, காங்கிரஸ் அரசு ஏற்றுக் கொள்ளாததால், சட்டசபையில் அதை தடுக்கும் முயற்சியில், கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபட்டனர்.நிதியமைச்சர், கே.எம்.மோனி, மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது என தெரிவித்து, கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் சபையில் கடும் ரகளையில் ஈடுபட்டு, கம்ப்யூட்டர், மேஜை, மைக் போன்ற பொருட்களை உடைத்து தகர்த்தனர். அவர்கள் மீது சபை காவலர்கள் நடத்திய தாக்குதலில், 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.கேரளாவை மலையாளிகள் ரொம்ப பெருமையா  Gods own country என்பார்கள் அது இதுதாய்ன் 
படுகாயம் அடைந்த எம்.எல்.ஏ.,க்கள், சக்கர நாற்காலியில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.சபையில் அமளி அதிகமானதும், பட்ஜெட் முழு உரையை வாசிக்க முடியாது என கருதிய மோனி, 10 நிமிடங்கள் மட்டும் வாசித்து அமர்ந்தார். பட்ஜெட் ஏற்கப்பட்டதாக சபாநாயகர், என்.சாக்தன் அறிவித்தார். அதன் பின், பத்திரிகையாளர் அறையில் பட்ஜெட்டின் மீதமிருந்த வரிகளை, கே.எம்.மோனி வாசித்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தங்களுக்குள் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.சட்டசபையில், இந்த களேபரங்களை, எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், துணைத் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் போன் றோர் பார்த்துக் கொண்டுஇருந்தனர்.அது போல, காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டியும், பிற அமைச்சர்களும் கலவர பீதியுடன், பாதுகாப்புக்காக சுற்றிலும் எம்.எல்.ஏ.,க்களை நிறுத்திக் கொண்டனர்.சட்டசபைக்கு வெளியேயும் கலவரம் நடந்தது. மார்க்சிஸ்ட் மற்றும் பா.ஜ., இளைஞரணியினர், போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்தனர். ஆயிரக்கணக்கில் கூடியிருந்தவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதில், பத்திரிகையாளர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மோதலின் போது கம்யூ., தொண்டர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறுகையில், கேரள சட்டசபையில் இதுபோன்ற வன்முறை நடைபெற்றதில்லை. சபை காவலர்கள் வன்முறையில் இறங்கியதில், 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

கேரள சபாநாயகர் என்.சாக்தன் கூறுகையில், கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் இந்த அளவுக்கு மோசமாக நடந்து கொள்வார்கள் என, நான் நினைக்கவே இல்லை. அவர்கள் தாக்கியதில், சபை காவலர்கள், 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில்,சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வது அரசின் உரிமை. பட்ஜெட் தாக்கல் செய்யப்படாவிட்டால், மாநிலத்தின் பொருளாதார நிலை பாழடைந்து விடும். அதை தடுக்க, கம்யூனிஸ்ட்டுகளுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது... கேரள சட்டசபையின் கறுப்பு நாள் இது என்றார்

கருத்துகள் இல்லை: