சனி, 14 மார்ச், 2015

ஜெயலலிதா : நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ஆதரித்தது ஏன்?

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில், சில திருத்தங்களை, தற்போதைய பா.ஜ., அரசு செய்து, அதை அவசர சட்டமாக, கடந்த டிசம்பர், 31ம் தேதி அமல்படுத்தியது.அந்த அவசர சட்டத்தை, சட்டமாக்கும் மசோதா, கடந்த, 9ம் தேதி, லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மீது, எதிர்க்கட்சிகள் தெரிவித்த கவலைகள் அடிப்படையில், பா.ஜ., அரசு மேலும், ஒன்பது திருத்தங்களை செய்து மறுநாள் தாக்கல் செய்தது.நில எடுப்பு தொடர்பான, இந்த சட்டத் திருத்தத்தில், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு விலக்குகள் அளிக்கப்படக் கூடாது என்பது, அ.தி.மு.க., முடிவு.அதை, பா.ஜ., அரசு ஏற்றுக்கொண்டதால், அந்த சட்ட திருத்த மசோதாவிற்கு, லோக்சபாவில், அ.தி.மு.க., ஆதரவளித்து ஓட்டளித்தது.  சொத்து குவிப்பு 'தீர்ப்புகள் திருத்தப்படலாம்' என்ற எதிர்பார்ப்பில், ஜெ மசோதாவை ஆதரிக்கிறார். இது பச்சைப் புள்ளைக்கும் தெரியும். அதற்காக கஷ்டப்பட்டு கொள்கை விளக்கம் வேறு. முதலில் பன்னீருக்குப் புரிகிறதா?


தி.மு.க., தலைவர் கருணாநிதியோ, 'இந்த சட்டதிருத்தங்களை முதலில் தீவிரமாக எதிர்த்த அ.தி.மு.க., என்ன காரணத்தாலோ, ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது' என, வேண்டுமென்றே அ.தி.மு.க., மீது குற்றம் சாட்டும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க.,வை பொருத்தவரை, தமிழ்நாட்டிற்கு, தமிழக மக்களுக்கு, எவை நன்மை தரக் கூடியதோ, அவற்றை மட்டும் ஆதரவு அளிப்பது என்றும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிரானவைகளை, எதிர்ப்பது என்பதும் தொடர்ந்து கடைபிடித்து வரும் விதியாகும்.அந்த அடிப்படையில், இந்த சட்ட திருத்தத்தை அ.தி.மு.க., ஆதரித்தது.இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: