தமிழ் சினிமாவின் தற்போது உள்ள நிலையில் ஏராளமான படங்கள் வெளியாகி
வருகின்றன. அவை அனைத்தும் ஒரு வார படங்களாகவே மாறி வருகிறது. ஒரு படம் 100
நாட்களை கடந்துள்ளது என்ற பெயர் மாறி தற்போது 1 வாரம் கடந்து விட்டது என்ற
செய்தியே பெரியதாகிவிட்டது. அப்படி உள்ள சூழ்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 6
படங்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து இந்த வாரம் 11 படங்கள் வெளியாகவுள்ளது. இதில் இவனுக்கு
தண்ணில கண்டம், வானவில் வாழ்க்கை, மகாபலிபுரம், ஐவராட்டம், இரவும் பகலும்
வரும், கதம் கதம், தவறான பாதை, சொன்னாப் போச்சு, ராஜதந்திரம் ஆகியவை 9
நேரடி தமிழ் படங்களாக வெளிவருகின்றன. புதிய தொழில் நுட்பத்தில்
மறுவெளியீடாக ‘சங்கராபரணம்’ படமும் ரிலீசாகிறது. மேலும் ஆங்கில டப்பிங்
படம் ஒன்றும் வெளியாகவுள்ளது.
இத்தனை படங்கள் வெளியாவதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
கடைசி நேரத்தில் இப்படங்கள் தியேட்டர் கிடைக்காமல் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது. ஒரே தியேட்டரில் 3, 4 படங்களும் ரிலீசாகிறது. ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு படம் என்று பிரித்து திரையிடுகிறார்கள். இப்படி வெளியாகும் படங்களில் எத்தனை படங்கள் முதலீட்டை திரும்பப் பெறுகின்றன, எத்தனை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் லாபம் பார்க்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக