சனி, 14 மார்ச், 2015

அழகான பெண்களுக்கு தான் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கின்றன: ராஜ்யசபாவில் சரத் யாதவ் பேச்சு

புதுடில்லி: அழகான பெண்களுக்கு தான் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கின்றன என ஐக்கிய ஜனதா தள கட்சியின் சரத் யாதவ் ராஜ்யசபாவில் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளத ராஜ்யசபாவில் இன்சூரன்ஸ் மசோதா குறித்த விவாதத்தின் போது, சரத்யாதவ் பேசியதாவது: இங்கு சிலர் தோல் நிறத்திற்கு மயங்கியவர்கள் உள்ளனர். கடவுள்கள் அனைவரும் ரவிசங்கர் பிரசாத் நிறமுடையவர்கள். ஆனால், மேட்ரிமோனியல் இணையதளங்களில், வெள்ளை தோலுடைய மணமக்களை மட்டுமே தேடுகின்றனர். நாடு முழுவதிலும், கருப்பு நிறமுடைய ஆண்கள் அதிகமாக உள்ளனர். தென் இந்தியாவை சேர்ந்த பெண்கள் அழகான உடல் அமைப்பை உடையவர்கள். அவர்களின் நிறமும் அழகானது. இதனை இங்கு பார்க்க முடியாது. அவர்களுக்கு நடனமாடவும் தெரியும் என கூறினார். மேலும் நிர்பயா ஆவணப்படம் எடுத்த லெஸ்லி உட்வின் குறித்து பேசிய சரத்யாதவ், அவர் வெள்ளை தோள் நிறமுடைய பெண் என்பதால், அனுமதி கொடுக்கப்பட்டது. அழகான பெண்களுக்கு தான் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கின்றன எனக்கூறியுள்ளார்.இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பண்ண நல்ல இஷு இல்லாம தவிக்கும் சீமான், திருமாவளவன், வைகோ போன்றோருக்கு நல்ல வாய்ப்பு போராட. தவற விடாதீர்கள்/


சரத் யாதவின் பேச்சுக்கு, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் டெப்ரிக் ஒ பிரையன் பல முறை எதிர்ப்பு தெரிவித்தும், அதனை பொருட்படுத்தாமல், சரத்யாதவ் தொடர்ந்து தென் இந்திய பெண்கள் குறித்து பேசினார். சரத் யாதவின் பேச்சுக்கு தி.மு.க., எம்.பி., கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கேட்க மறுப்பு: பேச்சு குறித்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், நான் என்ன தவறாக பேசினேன்? மன்னிப்பு கேட்க முடியாது என சரத் யாதவ் கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: