தமிழ்த் திரைப்படங்களின் தயாரிப்பை
அடுத்த 3 மூன்று மாதங்களுக்கு நிறுத்திவைப்பது தொடர்பாக தயாரிப்பாளர்கள்
சங்கம் ஆலோசனை செய்து வருகிறது
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்
மாதாந்திர பொதுக் குழுக் கூட்டம், அதன் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு
தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், திரைப்படத் தொழிலில் தொடர்ந்து
ஏற்பட்டு வரும் சரிவு, பட வெளியீட்டில் ஏற்பட்டு வரும் சிக்கல்கள் உள்ளிட்ட
பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அப்போது பேசிய தயாரிப்பாளர் மன்னன், நடிகர்களுக்கான
சம்பளம், படப்பிடிப்பு உபகரணங்களுக்கான வாடகை அதிகரிப்பு உள்ளிட்ட
காரணங்களால் திரைப்படத் தயாரிப்புகளுக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து
வருகிறது. அப்படி தயாரிக்கப்பட்டு வரும் படங்களை வெளியிடுவதில் பல
சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. ஷங்கர் ரஜனி போன்ற மெகா கொள்ளைக்காரர்களால் தமிழ் திரை உலகமே மாபியா பிசினெஸ் ஆகிவிட்டது, நல்ல படங்களுக்கு தியேட்டர் பற்றாக்குறை அடிதடி வெட்டு குத்து மாசாலா வன்முறை படங்கள் நாட்டையே குட்டி சுவராக்கி விட்டது பெண்களின் சுயமரியாதையை பறிப்பதில் இவைதான் முன்னணியில் உள்ளன.
நல்ல கதையம்சம் உள்ள படங்கள் கூட மக்களின் கவனத்தைப்
பெறுவதற்கு முன்பாகவே திரையரங்குகளில் இருந்து தூக்கப்படுகின்றன. இதற்கு பட
வெளியீடுகள் சீரமைக்கப்படாததே காரணம். இந்த நிலை தொடர்ந்தால் சினிமா
தொழில் வீழ்ச்சியடையும்.
எனவே, சரியான வழிமுறைகளை வகுக்க வேண்டும். இதற்காக
சினிமா சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் அடுத்த 3 மாதங்களுக்கு நிறுத்த
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இக் கோரிக்கையை சங்க உறுப்பினர்கள்
பலர் கைதட்டி வரவேற்றனர்.
இதுகுறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கலைப்புலி எஸ்.தாணு நிருபர்களிடம் கூறியதாவது:
தயாரிப்பாளர் மன்னனின் கோரிக்கை குறித்து கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டது. பல உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ள கோரிக்கை
என்பதால் அதுகுறித்து ஆலோசித்து வருகிறோம்.
தயாரிப்பாளர் சங்கம் என்ற அமைப்பு மட்டும் இதுகுறித்து
முடிவு எடுக்க முடியாது. ஏனென்றால், பல தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு இதில்
அடங்கியுள்ளது.
எனவே, சினிமா தொடர்பான அனைத்து சங்கங்களையும் கலந்து
ஆலோசித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதற்கான பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கப்படும் என்றார். dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக