புதன், 11 மார்ச், 2015

எனக்குள் ஒருவன் ! கனவில் வருவதெல்லாம் நினைவாகி வந்தால் அட வருகிறதே?


குமார் எழுதி இயக்கிய கன்னட திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் சித்தார்த்தின் எனக்குள் ஒருவன். கன்னடத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற LUCIA திரைப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அவர் மூலமாகத் தான் C.V.குமார், சித்தார்த் கைக்கு இந்த படம் வந்தடைந்தது. ஹீரோ வேடத்தில் சித்தார்த், அவரது இரண்டு ஜோடிகளாக தீபா சன்னிதி, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், ஜான் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்."கோமா ஸ்டேஜில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சித்தார்த்தின் ஃப்ளாஷ்பேக்கிலிருந்து துவங்குகிறது எனக்குள் ஒருவன் கதை. திரையரங்கில் வேலை செய்யும் ஒருவன் இரவில் தூக்கமின்றி தவிக்க, தவறானவர்களின் வழிகாட்டுதாலால் லூசியா மாத்திரையை பயன்படுத்துகிறான்.
லூசியா மாத்திரையின் பயன் நல்ல தூக்கம் வரும் என்பதோடு நில்லாமல், நாம் ஆசைப்படும் எப்படிப்பட்ட கனவும் அப்படியே தோன்றுவதோடு அடுத்த நாள் இரவு அந்த கனவு தொடரும் என்பதாய் இருக்கிறது. கேட்கும் போதே அடடே! என தோன்றுகிறதா? இதனால் சித்தார்த் எதிர்கொள்ளும் விபரீதங்கள் தான் எனக்குள் ஒருவன் கதை.
<">எடுப்பான பல், கருப்பான நிறம், டல் கலர் சட்டை என தியேட்டரில் வேலை செய்யும் சித்தார்த், லூசியா மாத்திரையின் உதவியால் கனவில் பரம்பரை நடிகனாக, ஐஃபோனும் கையுமாக, ஏங்கி நாடும் நடிகைகளிடம் இருந்து விலகிச் செல்லும் நல்ல மனிதனாக இருக்கிறார். நடிகனான சித்தார்த்தை ரசிக்க இரண்டு கண்கள் போதாது.


அழுக்கு சித்தார்தின் கதையிலும், அழகு சித்தார்தின் கதையிலும் ஒரே பயணம் தான். அழுக்கு சித்தார்துக்கு தீபா சன்னிதி எட்டாக் கனவாகிறார். ஆனால் கனவில் அவரை விரும்பும் காதலியாக இருக்கிறார். ஆடுகளம் நரேன் சித்தார்த் பணிபுரியும் தியேட்டரின் ஓனராகவும், நடிகன் சித்தார்தின் மேனேஜராகவும் இருக்கிறார். 

எல்லாம் நல்லாத்தான போய்ட்டுருக்கு என்ன பிரச்சனை எனும்போது தான் நினைவிலும், கனவிலும் ஒரு கும்பல் சித்தார்த்துக்கும், நரேனுக்கும் பணம் கேட்டு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறது. லூசியா மாத்திரை சித்தார்த்துக்கு நல்லது செய்ததா? கெட்டது செய்ததா? அவர் எப்படி கோமாவுக்குச் சென்றார்? என்பதெல்லாம் க்ளைமாக்ஸ். 


சந்தோஷ் நாராயணின் இசை எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய பலம். பிரபலமாகவே, ஏண்டி இப்படி, குட்டிப் பூச்சி, பூ அவிழும் பொழுதில் என எல்லா பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவிட பின்னணி இசையிலும் பின்னி பெடலெடுத்துவிட்டார். 

பெத்தெடுத்த குழந்தையை விட தத்தெடுத்த குழந்தையை நல்லா பாத்துக்கனும்னு ஒரு பழமொழி இருக்கு. இருக்கும். அந்த வகையில் தான் நடித்த நேரடிப் படங்களை விட இந்த படத்திற்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் சித்தார்த். தனது திறமைக்கு ஏற்றத் தீனி இந்த படத்தில் இருப்பதை உணர்ந்தே தானாக கேட்டு நடித்திருக்கிறார்.


தன்னை ஏமாற்றிவிட்டு நடிக்கச் சென்ற காதலியிடம் பிரேக்-அப் ஆகும் காட்சியில் அவர் நடித்தது நடிப்பு மாதிரியே தெரியவில்லை. சித்தார்தின் காதலியாக வரும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே சமந்தாவைப் போலவே இருப்பதோடு நன்றாக நடித்தும் இருக்கிறார். ஒரு ரவுண்டு வாங்க மேடம். இனி என்னிடம் வரும் இயக்குனர்கள் என் திறமைக்கு ஏற்ற இப்படிப்பட்ட ஒரு கதையை எடுத்து வரட்டும் என சவால் விடுவது போல் நடித்திருக்கிறார் சித்தார்த். லூசியா படம் பாத்தவர்களுக்கும் எனக்குள் ஒருவன் பிடிக்கும் என்பதே இதன் தனிச்சிறப்பு. 

எனக்குள் ஒருவன் - நல்ல நடிகன்!

கருத்துகள் இல்லை: