செவ்வாய், 10 மார்ச், 2015

இந்திய கற்பழிப்பு புள்ளிவிபரத்தை காரணம் காட்டி ஜெர்மன் கல்லூரி இந்திய மாணவருக்கு கதவை சாத்துகிறது !

புதுடில்லி: இந்திய மாணவருக்கு பயிற்சி அளிக்க, ஜெர்மனி பேராசிரியை ஒருவர் தெரிவித்த கருத்து, பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. 'இந்தியாவில் கற்பழிப்பு அதிகமாக இருப்பதால், இந்தியாவிலிருந்து வரும் இளைஞருக்கு நான் பயிற்சி அளிக்க மாட்டேன்' என, அந்தப் பேராசிரியை தெரிவித்ததற்கு, இந்தியாவில் உள்ள ஜெர்மனி தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிடப்படாத, இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ஜெர்மனியின், லெய்ப்ஜிக் பல்கலைக்கழக பேராசிரியை பெக்சிங்கர் என்பவரிடம், 'இன்டர்ன்ஷிப்' எனப்படும் பயிற்சி பெற விண்ணப்பித்த போது, அந்த பேராசிரியை மறுத்தார்.'இந்திய இளைஞருக்கு பயிற்சி அளிக்க மாட்டேன்' என பதில் கடிதம் அனுப்பினார். அதில், மேற்கண்டவாறு வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருந்தார். இந்தியா ஒரு பாலியல் பலாத்கார நாடு என்ற பெயரை எடுத்துகொண்டிருக்கிறது.  BBC ஆவணப்படத்தை தடை செய்தது கூட அதற்கு இன்னும் தூபம் போடுகிறது
அந்த கடிதத்தை, டில்லியில் உள்ள ஜெர்மனி தூதருக்கு அந்த இந்திய மாணவர் அனுப்பி வைத்து எதிர்ப்பை பதிவு செய்தார். அதையடுத்து, ஜெர்மனி பேராசிரியைக்கு, இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெய்னர், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி, கடிதம் எழுதி, பேராசிரியை கண்டித்தார்.
அதில், 'இந்தியா மட்டுமின்றி, ஜெர்மனி உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் பெண்கள் கற்பழிப்பு நடைபெறத் தான் செய்கிறது. இந்தியாவை மட்டும் இதில் தனிமைப்படுத்த முடியாது. டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு கொடூரத்திற்கு பிறகு, இந்தியாவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதை அறியாமல் இப்படியா பதில் அனுப்புவது...' என, தூதர் எழுதியிருந்தார்.அதன் பிறகு, அந்த பேராசிரியை, தன் தவறை மன்னிக்குமாறு, அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை: