புதுடில்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக காங்கிரசைச் சேர்ந்த
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை 83, 'குற்றம்சாட்டப்பட்டவர்' என
தெரிவித்துள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் 'சம்மன்' அனுப்பி ஏப்ரல் 8ம்
தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டுஉள்ளது.சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் அடுத்த
மாதம் ஆஜராகும் போது அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறபபடுகிறது.
கடந்த
2005ல் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நிலக்கரி துறைக்கும் அமைச்சராக
இருந்தார். அப்போது ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தை
'ஹிண்டால்கோ' என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கியதில் முறைகேடு
நடைபெற்றதாக கண்டறியப்பட்டது.
விசாரணை: இது குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., இந்த முறைகேட்டில் மன்மோகன் சிங்குக்கு சம்பந்தம் இல்லை என கோர்ட்டில் தெரிவித்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த கோர்ட் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.அதன் படி விசாரணை நடத்தப்பட்டது. அந்த வழக்கில் நேற்று திருப்பம் ஏற்பட்டது. நீதிபதி பாரத் பராஷர் பிறப்பித்த உத்தரவில் 'குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆறு பேரும் ஏப்ரல் 8ம் தேதி ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமரின் முதன்மைச் செயலர், டி.கே.ஏ.நாயர், ஹிண்டால்கோ நிறுவனத்தின் அதிபர் குமாரமங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர், பி.சி.பரேக், ஹிண்டால்கோ நிறுவனத்தின் அதிகாரிகள் இருவர் என ஆறு பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் சம்மன் அனுப்பி நீதிபதி பிறப்பித்த 73 பக்க உத்தரவின் முக்கிய அம்சங்கள்: தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ய வசதியாக நடைபெற்ற சதியில் அந்த நிறுவனத் தின் அதிபர் குமாரமங்கலம் பிர்லா மற்றும் அதன் அதிகாரிகள் இருவர் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. அந்த சதியில் நிலக்கரித்துறைமுன்னாள் செயலர், பி.சி.பரேக் மற்றும் அந்தத் துறையை அப்போது கவனித்து வந்த மன்மோகன் சிங்கும் இழுக்கப்பட்டனர்.
* இந்தச் சதியில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவரின் சதிச் செயல்கள் விதவிதமாக இருந்தாலும் அந்த தனியார் நிறுவனத்திற்கு சுரங்க ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் ஒன்றுபட்ட கருத்தேஇவர்களுக்குள் இருந்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.
* குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் அந்தகுற்றத்திற்கான மைய நோக்கம் தெளிவாக தெரிந்தே இருந்துள்ளது.
* மிகவும் திட்ட மிட்டு எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் முறைகேடான செயலை குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் மேற்கொண்டுள்ளனர்; அது சட்ட விரோதமானது.
* பிரதமராக இருந்ததாலும் நிலக்கரி துறையை கூடுதலாக கவனித்ததாலும் அந்தத் துறை எடுத்த ஒவ்வொரு முடிவை யும் கண்காணிக்க தன்னால் முடியாமல் போனது என மன்மோகன் சிங் கூறவே முடியாது.
* தனியார் நிறுவனத்திற்கு சாதகமான அவரின் செயல்பாட்டால் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.,க்கு நஷ்டம் ஏற்பட்டது; ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு லாபம் கொட்டியது.
* இந்த முறைகேட்டில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் தங்களுக்கு இருந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாட்டின் இயற்கை வளத்தைச் சேதப்படுத்தியுள்ளனர்; அவர்களின் செயலில் பொதுநலன் அறவே இல்லை.இவ்வாறு நீதிபதி உத்தரவின் முக்கிய அம்சங்கள் தெரிவிக்கின்றன.>இவர்கள் மீதான குற்றங்கள் உறுதிபடுத்தப்படுமானால் ஆயுள் தண்டனை கிடைக்கும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ள படி அடுத்த மாதம் 8ம் தேதி மன்மோகன் சிங் மற்றும் ஐந்து பேர் சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஆஜரானால் அவர்கள் கைது செய்யப்படவும்வாய்ப்பு உள்ளது.
2ஜி வழக்கு: இப்படித் தான் '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் கோர்ட் பிறப்பித்த சம்மனுக்குஆஜரான அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி போன்றோர் கைது செய்யப்பட்டனர்.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு போன்றது தான் என்பதால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
குற்றம்சாட்டப்பட்டவர் என்ற ரீதியில் சம்மன் வழங்கப்பட்டு கோர்ட்டில் ஆஜராகும் ௨வது முன்னாள் பிரதமராக மன்மோகன் சிங் விளங்குவார். இதற்கு முன் பி.வி.நரசிம்ம ராவ், ஜே.எம்.எம்., கட்சி, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சம்மன் பிறப்பிக்கப்பட்டு, விசாரணைக்கு ஆஜரா dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக