உடல்நலக் குறைவால் நடிகரும், இசைகலைஞருமான மீசைமுருகேசன் காலமானார். அவருக்கு வயது 85 .
தவில் வித்வான் சுப்ரமணிய முதலியாரின் மகனாக பிறந்தவர் ஐ.எஸ்.முருகேஷ் எனும் மீசை முருகேசன். தந்தையை போலவே இவரும் இசையில் ஆர்வம் மிக்கவர். கொட்டாங்குச்சியில் இசை வாசிப்பதில் இவர் மிகப்பிரபலம். கே.பி.சுந்தரம்மாள், தியாகராஜா பாகவதர், டி.எம்.செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட ஏராளமான இசை மேதைகளிடம் பணியாற்றி இருக்கிறார்.
இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் ஆர்வம் மிக்கவர். ஆண்பாவம், பூவே உனக்காக உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் மீசை முருகேசன். தமிழகம் தவிர்த்து உலகநாடுகள் பலவற்றிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். கலைத்துறையில் இவரது சேவையை பாராட்டி தமிழக அரசுக்கு, இவருக்கு கலைமாமணி விருது வழங்கியுள்ளது.தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக