வெள்ளி, 7 நவம்பர், 2014

உறவினர்கள் அழுத்தி பிடிக்க கட்டாய தாலி !அதிர்ச்சி விடியோ ! கர்நாடகாவில் காட்டுமிராண்டித்தனம்!

துமகூரு (கர்நாடகா) : திருமண நிச்சயத்துக்கு பிறகு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று மணப்பெண் கூற, அதை ஏற்க மறுத்த பெற்றோர் கட்டாய தாலி கட்டச் செய்த சம்பவம் வீடியோவில் எடுக்கப்பட்டு யூடூப்பில் பரவியுள்ளது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள துமகூரு நகரைச் சேர்ந்த பெண் மது. இவரும் சோமசேகர் என்பவரும் ஏழு வருட காதலர்கள். சோமேசேகர் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வருகிறார். காதல் விவகாரம் தெரிந்த நிலையில் ஓராண்டுக்கு முன்பே இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து வைத்தனர் பெற்றோர்கள். ஆனால் சமீபகாலமாக சோமசேகர் செயல்பாடுகளில் மதுவிற்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவரை போல அவர் நடந்து கொண்டுள்ளார். எனவே சோமசேகரை திருமணம் செய்விக்க வேண்டாம் என்று பெற்றோரிடம் கூறத் தொடங்கியுள்ளார். ஆனால் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துமகூரில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மணப்பெண்ணும் கட்டாயமாக அழைத்து வரப்பட்டார். ஆனால் தாலி கட்டும் நேரத்தில் முடியாது, வேண்டாம் என்று அவர் கத்தியபடி விலகபார்த்தார். இருப்பினும் மண மகன் கடமையே கண்ணாக தாலியை கட்ட, மணப்பெண்ணை பிடித்து அமுக்கி இரு தரப்பு உறவினர்களும் உதவியுள்ளனர். இந்த வீடியோ யூடூப்பில் போடப்பட்டுள்ளது. அதை பார்த்தால் கொடுமை தெரியும். இருப்பினும், தாலி கட்டும்போது கீழே விழுந்து உருண்டு அந்த தாலியை முழுமையாக கட்ட விடாமல் கழற்றிவிட்டார் மது. இதன்பிறகு போலீசார் தலையீட்டால் திருமணம் நிறுத்தப்பட்டது.
tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: