திங்கள், 3 நவம்பர், 2014

லண்டனில் அசைவ உணவுக்கு எதிராக நிர்வாண போராட்டம்


லண்டனில் உலக சைவ உணவு தினத்தை முன்னிட்டு அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பீட்டா ஆதரவாளர்கள் நிர்வாண நிலையில், உடலில் ரத்தம் போல காட்சியளிக்கும் சாயத்தை பூசிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். ட்ராபால்கர் சதுக்கத்தில் 100க்கும் மேற்பட்ட பீட்டா ஆதரவாளர்கள் சைவ உணவை ஊக்குவிக்க இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தின் மூலம் பல தரப்பட்ட மக்கள் அசைவ உணவிற்காக விலங்குகளை கொலை செய்வதையும், விலங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை உபயோகிப்பதையும் நிறுத்துவார்கள் என விலங்குகள் உரிமை அமைப்பு தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளது. இது குறித்து பீட்டாவின் இயக்குனர் மிமி பெக்கெச்சி தெரிவிக்கையில், 'விலங்குகளாலும் மனிதர்களை போல வலி, பயம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை உணர முடியும்.இந்த நிலையில், சுற்றுப்புற சூழலுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் அதிக எண்ணிகையில் விலங்குகள் கொலை செய்யப்படுகின்றன. அசைவ உணவினால் இங்கிலாந்தில் உடல் பருமன் நோயும் அதிகரித்து வருகிறது' என தெரிவித்தார் nakkheeran,in

கருத்துகள் இல்லை: