ஞாயிறு, 2 நவம்பர், 2014

ராஜ்யசபாவில் சிக்கல்? வளர்ச்சிப்பதையில்(?) நாட்டை இட்டு செல்லும் மோடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு, ராஜ்யசபாவில், பெரும்பான்மை பலம் இல்லாதது, பெரும் முட்டுக்கட்டையாக அமையும் என கூறப்படுகிறது. லோக்சபாவில் பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கும், பா.ஜ., கூட்டணி, ராஜ்யசபாவில், மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல், கூட்டு பார்லி மென்ட் கூட்டத்தை கூட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.கடந்த மே மாதம் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 543 தொகுதிகளில், 282 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை, காங்கிரசிடம் இருந்து கைப்பற்றியுள்ள, பா.ஜ.,வுக்கு, அதன் கூட்டணி கட்சிகளையும் சேர்த்து, லோக்சபாவில் அறுதிப்பெரும்பான்மை பலம் உள்ளது  எந்த ஓர் உருப்படியான மக்களை சென்று மக்களுக்காக இதுவரை செய்யாத அரசுக்கு இது ஓர் நொண்டிக்குதிரை சாக்குதான். பெரும்பான்மையான நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தில் மண்ணை அள்ளிப்போடுவது போல..கேஸ் விலையேற்றம்..ரயில் கட்டண உயர்வு..கட்டுக்குள் அடங்காத விலைவாசி உயர்வு. மண்ணெண்ணெய் விலை உயர்வு..இதெல்லாம்தான் வளர்சிபாதை என்பதோ? இன்னமும் உள்ள நாலரை ஆண்டுகளுக்கு இப்படி ஏதாவது சாக்குபோக்கு சொல்லித்தான் மோடிக்கு முட்டுகொடுக்க முடியும்.. பேய் ஆட்சி என்று சொல்லி பிசாசை கொண்டுவந்துவிட்டோமே..என்பதுதான் இன்றைய பா ஜ க ஆட்சிக்கு மக்கள் கொடுக்கும் விமர்சனம். சவுண்டு மட்டுமே அதிகம்..ஆடை அலங்காரம் அபாரம்..பயணங்கள் ஓஹோஹோ..மக்களுக்காக என்றால்..பெப்பேதான்..
>தலைகீழாக... மொத்தம், 335 எம்.பி.,க்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது. காங்கிரஸ், 44 எம்.பி.,க்களையும், காங்கிரஸ் கூட்டணி, 59 எம்.பி.,க்களையும், இடதுசாரிகள், 11 எம்.பி.,க்களையும் கொண்டுள்ளனர்.ஆனால், ராஜ்யசபாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. இப்போதைய நிலையில், ராஜ்யசபாவில் பலம் வாய்ந்த கட்சி, காங்கிரஸ்தான். மொத்தம், 245 எம்.பி.,க்களை கொண்ட ராஜ்யசபாவில், காங்கிரஸ் கட்சிக்கு, 68 எம்.பி.,க்கள் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக, பா.ஜ.,வுக்கு, 43 எம்.பி.,க்கள் தான் உள்ளனர். கூட்டணியாக பார்த்தாலும், காங்கிரஸ் கூட்டணிக்குத் தான் ராஜ்யசபாவில் பலம் அதிகம்.இதனால், மோடி அரசின் மசோதாக்கள், ராஜ்யசபாவில் சுமுகமாக நிறைவேறுவது சிரமம் என்ற நிலை காணப்படுகிறது. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதை இலக்காக கொண்டு செயல்படும் மோடி அரசு, பல சட்டங்களையும், திட்டங்களையும் இயற்றி உள்ளது. அவற்றில்:
*சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு, பார்லிமென்டில் ஒப்புதல் பெற வேண்டும். இன்ஸ்பெக்டர் ராஜ் முறையை ஒழித்து, தொழிற்சாலைகளுக்கு ஏதுவான, தொழில்கள் துவங்க வசதியான முறையில் பல சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.முந்தைய காங்கிரஸ் அரசின் செயலற்ற தன்மையை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், இந்த சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த சீர்திருத்தங்கள், மசோதாக்களாக மாறி, லோக்சபாவில் நிறைவேறி, ராஜ்யசபாவுக்கு செல்லும்போது, காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா என்பது சந்தேகமே.
*நிலக்கரி சுரங்க உரிமங்கள், சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தொழில் துறை பாதிக்கப்படாமல் இருக்க, அவசர சட்டம் பிறப்பித்துள்ள மத்திய அரசு, அதை சட்டமாக்க, பார்லிமென்டின் இரு சபைகளிலும் மசோதாவை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.முந்தைய, 10 ஆண்டுகால, காங்கிரஸ் ஆட்சியின் போது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு உரிமத்தில் முறைகேடு நடந்ததாக கூறி வரும் பா.ஜ., அரசின் இந்த அவசர சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் பெரும்பான்மையாக இருக்கும் காங்கிரஸ் நிச்சயம் ஆதரவு அளிக்காது என்றே கூறப்படுகிறது.


காங்., ஆதரவு:




மேற்கு வங்கத்தில், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, அங்கு நடைபெறும் சிறிய குற்றங்களையும், பெரிதாக வெளிச்சம் போட்டு காட்டும் பா.ஜ.,வுக்கு, லோக்சபாவில் சிம்ம சொப்பனமாக திகழ, அக்கட்சி முடிவு செய்துள்ளது.நவ.,24ல் துவங்கி, டிசம்பர் 23ல் நிறைவடைய உள்ள, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடரில், மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வின் அரசியலுக்கு, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் என, கூறப்படுகிறது.இதனால், இந்தக் கட்சியின், ராஜ்யசபா எம்.பி.,க்களின் ஆதரவு, மத்திய அரசின் மசோதாக்களுக்கு நிச்சயம் கிடைக்காது.லோக்சபாவில் நிறைவேறி, ராஜ்யசபாவில் முடங்கிக் கிடக்கும் பல மசோதாக்களை நிறைவேற்ற, காங்கிரஸ் ஆதரவு தேவைப்படுகிறது. அத்தகைய மசோதாக்களாக,
*இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா
*தொழிற்சாலைகள் (திருத்த) மற்றும் அப்பரன்டைஸ் (திருத்த) மசோதா
*சரக்கு மற்றும் சேவை வரிகள்
*வரித்துறை சீரமைப்பு நடவடிக்கைகள்போன்ற பல மசோதாக்களுக்கு, ராஜ்யசபாவில் ஒப்புதல் தேவைப்படுகிறது.

இப்போதைய நிலையில், லோக்சபாவில், 59 மசோதாக்களும், ராஜ்யசபாவில், 67 மசோதாக்களும் நிலுவையில் உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டும்.ராஜ்யசபாவில் காங்கிரசின் ஆதரவை பெற, அக்கட்சியுடன் அனுசரித்து போக வேண்டும் அல்லது கூட்டு பார்லிமென்ட் கூட்டத்தை கூட்டி, இந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும்.இந்நிலை, இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்கு தவிர்க்க முடியாதது என்றே கூறப்படுகிறது. ராஜ்யசபாவில் பலத்தை அதிகரிக்க, வரவிருக்கும் சட்டசபை தேர்தல்களில், அதிக இடங்களை கைப்பற்ற வேண்டியது அவசியம்.சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதுபோன்ற வெற்றியை, இந்த மாதம் நடைபெற உள்ள, ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்களிலும், பா.ஜ., பெற வேண்டும். அதுபோல, அடுத்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்றால் தான், ராஜ்யசபாவில், பா.ஜ.,வின் பலம் கூடும்; நினைத்த சட்டங்களை ஏற்படுத்த முடியும்; நாட்டை வளர்ச்சிப் பாதையில் தடையின்றி கொண்டு செல்ல முடியும். தினமலர்.com

கருத்துகள் இல்லை: