கிருஷ்ணனும் ராதையும்' என்றெரு மலையாள படம் கேரளா திரை உலகின் பாரம்பரியங்களை உடைத்தெறிந்து விட்டது, சந்தோஷ் பண்டிட் என்பவர் இந்த படத்தை வெறும் ஐந்து லட்சம் ரூபாய்களில் தயாரித்து பெரும் வெற்றியும் பெற்று விட்டார். அதுமட்டுமல்ல வெறும் லூசுப்படம் என்று ஏறக்குறைய எல்லாராலும் விமர்சிக்கப்பட்ட இப் படத்தில் ஹீரோவா நடிச்சு, பாட்டும் எழுதி, பாடல்கள்,
இசை, சண்டைப் பயிற்சி, கலை, பின்னணி இசை, கிராஃபிக்ஸ், பாடகர், கதை,
வசனம், திரைக்கதை, உடைகள், பி.ஆர்.ஓ, இயக்குநர், தயாரிப்பு என 18
ஒர்க்குகளை செய்து ரெக்கார்டு பிரேக் பண்ணி கேரளாவையே அதிர வைத்திருகிறார் சந்தோஷ் பண்டிட்
படத்துல வர்ற 3 பாட்டுக்களை Youtubeலயே வெளியிடறாரு.நிறைய வந்திருது, அதிகமில்லைங்க 5 லட்சம் hitsதான். ஆச்சர்யமா இருக்கா? அப்படியான்னு, அடுத்து இன்னும் 3 பாட்டுக்களை வெளியிட்டாரு, hits எகிர ஆரம்பிச்சிருச்சு. மக்களோட எதிர்பார்ப்பும் அதிமாயிருச்சு. கடைசியா 2 பாட்டுக்கள், அப்புறம் Trailer. பட்டை லவங்கம் எல்லாம் சேர்த்து கெளப்பிருச்சு பாட்டுக்கள். Fans Clum அங்காங்கே முளைக்க வேற ஆரம்பிச்சிருச்சு. இப்படி Youtubeஆலயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின படம் கிருஷ்ணனும் ராதையும். அதுவும் படம் வெளிவருவதற்கு முன்னமேயே. சரி, அப்படி என்னதான் அந்தப் பாட்டுக்களிலும், trailerலும் கேட்குறீங்களா. நீங்களே பார்த்துக்குங்க. இப்பொழுது கேரளாவில் ரிங் டோனாக வலம் வரும் பாடல் இது நம்மூர் அஷ்டாவதானி டீ.ஆர் எல்லாம் தூரமா போய் நிக்கச் சொல்லுங்க. படத்துல இவரோட பங்களிப்பு என்னென்னு பாருங்க. எல்லாரும் லூசுன்னு சொன்னாலும் சாதனை சாதனைதான் இளையதலைமுறைக்கு ரசிப்பதற்கு இவரது படைப்பில் ஏதோ இருக்கிறது ?உண்மையில் இவரது கதையை திரைப்பட கல்லூரிகளில் பாடமாக வைக்கவேண்டும்
பாடல்கள்
இசை
சண்டைப் பயிற்சி
கலை
படத்தொகுப்பு
பிண்ணனி இசை
Grapics
Effects
பாடியது
கதை
வசனம்
திரைக்கதை
உடைகள்
Title Graphics
Pro. Desgining
இயக்குனர்
தயாரிப்பு.
அதாவது எல்லாம் இவரே. குறும்படத்துல நாமளே எல்லாம் பண்ணிக்கிறா
மாதிரி. சும்மா இல்லீங்க, படத்துல 8 பாட்டுக்கள் பாஸூ. இந்தப்
பாட்டையும், trailerஐயும் பார்த்துட்டு நம்மூர் சாம் ஆண்டர்சன், பவர்
ஸ்டார் மாதிரிதாங்கன்னு சொல்லிடாதீங்க. விவரமானா ஆளு இவரு. படத்துல வர்ற 3 பாட்டுக்களை Youtubeலயே வெளியிடறாரு.நிறைய வந்திருது, அதிகமில்லைங்க 5 லட்சம் hitsதான். ஆச்சர்யமா இருக்கா? அப்படியான்னு, அடுத்து இன்னும் 3 பாட்டுக்களை வெளியிட்டாரு, hits எகிர ஆரம்பிச்சிருச்சு. மக்களோட எதிர்பார்ப்பும் அதிமாயிருச்சு. கடைசியா 2 பாட்டுக்கள், அப்புறம் Trailer. பட்டை லவங்கம் எல்லாம் சேர்த்து கெளப்பிருச்சு பாட்டுக்கள். Fans Clum அங்காங்கே முளைக்க வேற ஆரம்பிச்சிருச்சு. இப்படி Youtubeஆலயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின படம் கிருஷ்ணனும் ராதையும். அதுவும் படம் வெளிவருவதற்கு முன்னமேயே. சரி, அப்படி என்னதான் அந்தப் பாட்டுக்களிலும், trailerலும் கேட்குறீங்களா. நீங்களே பார்த்துக்குங்க. இப்பொழுது கேரளாவில் ரிங் டோனாக வலம் வரும் பாடல் இது நம்மூர் அஷ்டாவதானி டீ.ஆர் எல்லாம் தூரமா போய் நிக்கச் சொல்லுங்க. படத்துல இவரோட பங்களிப்பு என்னென்னு பாருங்க. எல்லாரும் லூசுன்னு சொன்னாலும் சாதனை சாதனைதான் இளையதலைமுறைக்கு ரசிப்பதற்கு இவரது படைப்பில் ஏதோ இருக்கிறது ?உண்மையில் இவரது கதையை திரைப்பட கல்லூரிகளில் பாடமாக வைக்கவேண்டும்
தீபாவளிக்கு தமிழ் படங்கள் (வேலாயுதம், 7ம் அறிவு) வெளியாகுதுங்கிறதனால மலையாளப் படங்கள் எதுவுமே வெளியாகலை. அந்தளவுக்கு நம்ம படங்களைப் பார்த்து பயந்து போய் இருக்காங்க, கேரளத்து அச்சன்கள். ஆனா துணிஞ்சு படத்தை வெளியிட்டாரு சந்தோஷ் பண்டிட். முதல்ல எர்ணாகுளத்துல 3 திரையரங்கத்துல வெளியாச்சு படம், எல்லாக்காட்சிகளும் ஹவுஸ் ஃபுல். உடனடியா இன்னும் ப்ரிண்ட் போட்டு 12 திரையரங்கத்துல வெளியிட்டாங்க. எல்லா திரையரங்கத்துலேயும் ஹவுஸ் ஃபுல்.
மண்டை காய்ஞ்சு போயிட்டாங்க கேரள திரையுலக மக்கள். உடனடியா, ஒரு விவாதம் ஏற்பாடு பண்ணினாங்க, அதுல சந்தோசும் பங்கேற்க, காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சி எடுத்துட்டாங்க மக்களும், திரையுலக மக்களும். Negative Promotion அப்படின்னாங்க, லூஸுத்தனமுன்னு கூட சொன்னாங்க. அப்போ சந்தோஷ் சொன்னதுதான் எல்லாருக்குமே அதிர்ச்சி. அதாவது ”நான் கேரளத்து சூப்பர் ஸ்டாரானது புடிக்காம பொறாமையில் பேசுறாங்க” அப்படின்னு குண்டைத் தூக்கிப் போட்டுட்டாரு. கஷ்ட காலம் வரும் போது ஆண்டவன் அவதரிப்பான், அப்படி அவதரிச்சவன்தான் இந்த சந்தோஷ் கூட சொன்னாங்க, அதாவது கிண்டலா.
மலையாள சினிமாவே நொடிஞ்சி போயிருக்கிற இந்த நேரத்துல, இப்படி ஒரு மலையாளப் படம் வெற்றிகரமா ஓடுறதை பார்த்துட்டு, திரையுலக ஜாம்பவானான மது, ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணி ஒரு விருதும் குடுத்தாரு. வாய்பிளந்துட்டாங்க கேரளா மக்கள். அதன் காணொளி இதோ.
இதே நிகழ்ச்சியில சந்தோஷ் பண்டிட் சொன்னது இது ”மக்கள் ISD call போட்டு கூப்பிட்டு திட்டுறாங்க. அதாவது 3 நிமிசம் முதல் 15 நிமிசம் வரைக்கும் திட்டுறாங்க. ஆனா, நானா எந்த callயும் cut பண்றது இல்லை. அவுங்களாத்தான் cut பண்ணிட்டுப் போறாங்க. இது எல்லாம் என்னோட வெற்றி” அப்படின்னும் நேரடியாவே சொல்லிட்டாரு. படத்தோட மொத்த செலவு 5 லட்சம், வசூல் எவ்ளோ ஆச்சு தெரியுங்களா? மனசை திடப்படுத்திக்குங்க மக்களே. ஒரு கோடியைத் தாண்டிருச்சாம். அடுத்தப் படத்திற்கான ஆங்கிலப் பாட்டும் இப்போ hit. இதுக்கும் இவரு போற இடமெல்லாம் செம கூட்டமா வந்து திட்டிட்டுப் போறாங்க.
கேரளா மக்கள் எல்லாம் இவரை கேணைன்னு சொல்லிகிட்டே படம் பார்க்க, இப்போ இவர் கோடீஸ்வரர் ஆகிட்டாரு. இப்போ சொல்லுங்க பாஸூ, யாரு கேணைன்னு? இதுக்கும் இவர் எந்த promotionக்குன்னு எந்தச் செலவும் பண்ணலை. எல்லாம் Youtubeல பண்ணின promotionதான். கேரளாவின் talk of the Townஆ,இல்லே இல்லே talk of the Stateஆ மாறியப்போயிட்டாரு இந்த கேரளத்து சூப்பர் ஸ்டார் சந்தோஷ் பண்டிட். படம் வெளியானதுல இருந்து செய்திகள், மக்கள் பார்த்தா பேசிக்கிறது, பதிவுகள் எல்லாமே சந்தோஷ் பண்டிட்தான். என்ன கொடுமைன்னா, இனிமே இது மாதிரி எத்தனை லூஸுங்க இந்த மாதிரி கெளம்பி வரப்போறாங்களோ தெரியலை. ஒரு அதிரடி சாதனையை செய்து மோகன் லால் மம்மூட்டியை எல்லாம் கவுத்த ராசா நீ வாழ்க வாழ்க ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக