ரும், 14ம் தேதி மீண்டும் உதயமாகிறது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி.
கொடி, பேனர்கள் மற்றும் கட்சியின் துவக்க விழா தொடர்பான ஏற்பாடுகளில்,
வாசன் வட்டாரங்கள் தீவிரமாக உள்ளன.கடும் அதிருப்தி:தமிழக
காங்கிரஸ் உறுப்பினர் அட்டையில், காமராஜர் மற்றும் மூப்பனார் படங்கள் இடம்
பெறுவது தொடர்பாக, டில்லி மேலிடம் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ள,
முன்னாள் மத்திய அமைச்சர் வாசன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்
ஞானதேசிகன் மற்றும் வாசனின் ஆதரவு மாவட்ட தலைவர்கள், 30 பேர், மாநில
நிர்வாகிகள், மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் பலர்,
காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற தயாராகி உள்ளனர்.சென்னை, ராதாகிருஷ்ணன்
சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில், இன்று காலை, 9:00 மணிக்கு வாசன்
தலைமையில் கூடும் குழந்தைகள் தினத்தன்று குழந்தைத்தனமான விளையாட்டு வாசனிடமில்லாத
சொத்துக்களா? தமிழ் நாட்டில் பிறவி
பணக்கார கட்சி மீண்டும் உதயம்? பாஜகவுக்கு போக ஒரு ரூட்டு தேவைப்படுதில்ல?
ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் பொருளாளர் கோவை தங்கம், தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் பட்டுக்கோட்டை ரங்கராஜன், ஜான் ஜேக்கப், பிரின்ஸ், முன்னாள் எம்.பி.,க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பலர் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில், இரண்டாம் கட்ட தலைவர்களையும், மூத்த தலைவர்களையும் மனம் விட்டு பேச அனுமதித்து, அவர்களின் கருத்துக்களை கேட்கிறார் வாசன். அதன் பின், வரும், 14ம் தேதி, நேருவின், 125வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், மீண்டும் தமிழ் மாநில காங்கிரசை துவக்கும் விழா நடைபெற உள்ளது.
மீண்டும் த.மா.கா., துவக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை, இன்று உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெறும் கூட்டத்திற்குப் பின், வாசன் அறிவிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 1996ல், தமிழகத்தில், அ.தி.மு.க., உடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாசனின் தந்தை ஜி.கே.மூப்பனார், தமிழ் மாநில காங்கிரசை துவக்கினார். அதன் பின், வாசனால் காங்கிரசுடன் இணைக்கப்பட்ட, த.மா.கா., மீண்டும் உதயமாக உள்ளது.அதனால், காமராஜர், மூப்பனார், சைக்கிள் படங்களுடன் கூடிய கட்சிக்கொடி, கட்சியின் கொள்கை திட்டங்கள், வரவேற்பு பேனர்கள், சுவரொட்டிகள் தயாரிக்கும் பணிகளில், வாசன் ஆதரவாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு சத்தியமூர்த்தி பவன், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம், காமராஜ் பவன் மற்றும் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகள் அனைத்தும், அகில இந்திய காங்கிரஸ் பெயரில், சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளன. எனவே, அந்த சொத்துகளுக்கு உரிமை கொண்டாட, வாசன் ஆதரவாளர்கள் விரும்பவில்லை.
- நமது நிருபர் - dinamalar.com

எதிர்பார்ப்பு:

காங்., சொத்து யாருக்கு?
காங்கிரஸ் கட்சிக்கு சத்தியமூர்த்தி பவன், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம், காமராஜ் பவன் மற்றும் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகள் அனைத்தும், அகில இந்திய காங்கிரஸ் பெயரில், சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளன. எனவே, அந்த சொத்துகளுக்கு உரிமை கொண்டாட, வாசன் ஆதரவாளர்கள் விரும்பவில்லை.
- நமது நிருபர் - dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக