வெள்ளி, 7 நவம்பர், 2014

ஜாதி சுழலில் சிக்குகிறாரா முதல்வர்? : இறுகும் கண்காணிப்பு வளையம்

முதல்வர் பன்னீர்செல்வம், ஜாதி அரசியலுக்குள் சிக்குவதாக எழுந்திருக்கும் புகாரைத் தொடர்ந்து, அவர் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி, அதிகார மட்டத்திலிருந்து, சிலருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருப்பதாக, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.
கோபத்துக்கு ஆளாகக்கூடாது: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி, தண்டனை அடைந்ததால், எம்.எல்.ஏ., பதவியையும், முதல்வர் பதவியையும் இழக்க வேண்டியதானது. இதனால், தமிழகத்தில் புதிய முதல்வராக, நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வராக பதவி ஏற்றுக் கொண் டாலும், எந்த இடத்திலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகி விடக்கூடாது என்பதில், தெளிவாக இருந்து செயல்படுகிறார்.   முதலில் இந்த குருபூஜைகளை தடை செய்யவேண்டும் அல்லது மக்களே அவற்றைத் தடுத்து நிறுத்தவேண்டும். அவை இனவெறியைத் தூண்டுவதைத் தவிர வேறு எதற்க்காகவுமல்ல

அதனால், அவர் இன்று வரையில், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்குக் கூட செல்லாமல், தான் ஏற்கனவே இருந்த, அமைச்சருக்கான அறையிலேயே இருந்து, முதல்வர் பணிகளை கவனித்து வருகிறார்.எல்லா விஷயங்களிலும், பணிவு காட்டி செயல்படுவதோடு, ஆடம்பரம் இல்லாமல், அமைதியாக செயல்படுவதையும் வாடிக்கையாக்கி இருக்கிறார்.
ஆனால், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை, உடனடியாக சரிசெய்வது உள்ளிட்ட பல விஷயங்களில், தமிழக அரசு அமைதி காத்தது. அதே போல, கிரானைட் முறைகேட்டை விசாரிக்க, உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சகாயம் கமிஷனை, விரைந்து செயல்பட விடாமல் செய்தது என, பல விஷயங்களில் வழக்கம் போல, தன் அமைதியை காட்டினார், முதல்வர் பன்னீர்செல்வம்.இதனால், அவரை, எதிர்க்கட்சிகள் செயல்படாத நிர்வாகத்துக்கு சொந்தக்காரர், பொம்மை முதல்வர், டம்மி முதல்வர், ஜெயலலிதாவின் அடிமை என்றெல்லாம், கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால், அதற்கும் கூட, பன்னீர்செல்வம் பதில் கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்தார்.இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தை, எதிர்க்கட்சிகள் இப்படி கடுமையாக விமர்சிப்பது சரியல்ல என, முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர்கள் கோபமானார்கள்.வராது வந்த மாமனி போல, முக்குலத்து இனத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், தமிழகத்தின் முதல்வர் ஆகி இருப்பது, குலத்துக்கே பெருமை. அவருக்கு எதிர்க்கட்சிகளால் சிக்கல் என்கிற போது, அதை பார்த்துக் கொண்டு, சும்மா இருக்க முடியாது என, பொங்கினார்கள்.
அடக்கத்தின் மறு உருவம்விளைவு, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அதன் நிறுவனத் தலைவர் சேதுராமன், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக, அறிக்கை வெளியிட்டார். அதில், பன்னீர்செல்வத்தை, காமராஜருக்கும், அண்ணாவுக்கும் இணையாக ஒப்பிட்டிருந்தார். ஆணவம், பணிவு எதுவுமில்லாமல், அடக்கத்தின் மறு உருவமாக இருந்து, அவர் செயல்படுவதை விரும்பாமல், சிலர் அவரை கேலி செய்கின்றனர் என, அதில் குறிப்பிட்டிருந்தார்.
'பன்னீர்செல்வம் ஆலோசனையின் பேரில் தான், ஜாதிய இயக்கமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், திடீரென அறிக்கை விட்டிருக்கிறது' என, சிலர் சொல்ல ஆரம்பிக்க, அதிகார மேலிடத்தில் இருப்பவர்கள், பன்னீர்செல்வம் ஜாதி பின்புலத்தில் செயல்படுகிறாரா என, சந்தேகம் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.
எதிர்பார்த்தது போலவே...: இதுகுறித்து, அரசியல் வட்டாரங்களில் கூறியதாவது:இப்படியெல்லாம் பிரச்னைகள் ஏற்படும்; அதில் சிக்கிவிடக் கூடாது என்பதால் தான், பன்னீர்செல்வம், முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட பின்னால், சொந்தக்காரர்களைக் கூட, அதிகம் சந்திப்பதை தவிர்த்து வருகிறார். வாரந்தோறும் சனி, ஞாயிறு அன்று, சொந்த ஊரான பெரியகுளம் சென்றுவிடும் பன்னீர், முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பின்னால், ஓரிரு முறைதான் சென்றிருக்கிறார். எனினும் அவர் எதிர்பார்த்தது போலவே, அவரை சிலர் பின்தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.அவர்கள் அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கு, கொடுக்கும் தகவல்களை வைத்துத்தான், முதல்வராக, பன்னீர்செல்வம் நீண்ட காலத்துக்கு தொடருவாரா என்பது தெரிய வரும்.இவ்வாறு, அந்த வட்டாரங்க  dinamalar,com

கருத்துகள் இல்லை: