புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்கும் முடிவை எடுத்ததற்காக காங்கிரஸ் விரைவில் வருத்தப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:கடந்த 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், டெல்லி குடிநீர் வாரியம் குறித்த கோப்புகளை நேற்று ஆராய்ந்து பார்த்தேன். இதுதொடர்பாக, அடுத்த சில தினங்களில், ஊழல் அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எங்களுக்கு ஆதரவு கொடுக்கும் முடிவை எடுத்ததற்காக காங்கிரஸ் விரைவில் வருத்தப்படும்.காங்கிரசிடம் இருந்து நாங்களாக ஆதரவை பெறவில்லை. வலுகட்டாயமாக கொடுக்கப்பட்டது. இது ஒரு விசித்திரமான ஆதரவுதான். நான் இதுவரை அவர்களை சந்திக்கவோ, பேசவோ இல்லை.இவ்வாறு அவர் கூறினார். வெறும் ஸ்டன்ட் அடிக்கும் அவசரம் தெரிகிறதே
கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்துள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கூறுகையில், ‘‘நாங்கள் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறோம். இதை நாங்கள் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். ஆனால் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பொறுத்து கொள்ள மாட்டோம். எங்களை தூண்டிவிட்டு ஆதரவை வாபஸ் பெற வைக்கலாம் என கெஜ்ரிவால் நினைக்கிறார். இதன் மூலம் அரசை நடத்துவதில் இருந்து தப்பித்து ஓடி விடலாம் என்பதே அவரது எண்ணம்’’ என்றார்.முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், ‘‘காமன்வெல்த் விவகாரத்தை ஏற்கனவே சுங்லு கமிட்டி தீவிரமாக விசாரித்து விட்டது. இருப்பினும் கெஜ்ரிவால் செய்ய விரும்புவதை செய்யட்டும். அதை நாங்கள் வரவேற்கிறோம்’’ என்றார். - .tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக