கேப்டனுக்கு என்ன கொள்கை ? "
"எந்தக் கட்சி 500 கோடிக்கு குறையாம குடுக்குதோ அந்தக் கட்சியோடதான் கூட்டணின்ற கேப்டனோட கொள்கை. அந்தக் கொள்கையில சற்றும் வளைந்து கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டார்"
"சரி... பிஜேபி ஒன்னும் யோக்கியமான கட்சி இல்லையே. நெறய்ய பணம் வச்சிருக்காங்க. குடுக்கறதுக்கு என்ன ? " என்றான் வடிவேலு.
"அவங்க குடுக்கறதுக்கும் ரெடிதான். ஆனா, கேப்டன் இதுக்கு சரிப்பட்டு வருவாரான்னு அவங்களுக்கு சந்தேகம். கேப்டனுக்கு தனிப்பட்ட முறையில் பெரிய செல்வாக்கு இல்ல. கடந்த மூன்று ஆண்டுகளில், அவரோட செல்வாக்கு கணிசமா சரிஞ்சிருக்கு. அதனால, இந்த ஆளுக்கு 500 கோடி குடுக்கறதுக்கு, அந்தப் பணத்தை நாமளே தமிழகத்தில் செலவு செய்தா, வெற்றி பெறலாம்னு நினைக்கிறாங்க. இது தவிரவும், ஆர்எஸ்எஸ், விஜயகாந்த்துக்கு இவ்வளவு பணம் கொடுப்பது அவசியமில்லைன்னு நினைக்கிறாங்க"
"அதுவும் சரிதான். ஆனா, கேப்டன் கொஞ்சம் ஓவராத்தான் எதிர்ப்பாக்கறாரு இல்ல ? " என்று வினவினான் ரத்னவேல்.
"அதுக்கு காரணம் இல்லாம இல்லையே. ஒரு பெரிய கட்சியான அதிமுக கூட சேந்து 27 எம்.எல்.ஏ ஜெயிச்சுட்டார். இன்னொரு பெரிய கட்சியான திமுக, காலில் விழாத குறையா கெஞ்சறாங்க.
அப்படி இருக்கும்போது, அவருக்கு ஏன் இறுமாப்பு இருக்காது ? திருமாவளவன் போயி கெஞ்சறாரு. மனிதநேய மக்கள் கட்சியில போயி கெஞ்சறாங்க. அப்போ கேப்டன் மிஞ்சத்தானே செய்வாரு ?"
"அதுவும் சரிதான். ஆனா, கேப்டன் மலேசியாவுக்கு ஓய்வு எடுக்கப் போயிட்டாரே... ? "
"அங்கயும் அவரை விடல. தயாநிதி மாறன் மலேசியாவில் விஜயகாந்தை சந்திச்சு பேசியிருக்காரு. அங்க கூட்டணித் தொகுதிகளை விட பணப் பரிவர்த்தனை பத்தித்தான் முக்கியமான பேச்சு நடந்திருக்கு. மனித நேய மக்கள் கட்சிப் பிரதிநிதிகளும் மலேசியாவில் விஜயகாந்தை சந்திச்சு பேசியிருக்காங்க. பிஜேபி கூட மட்டும் போயிடாதீங்கன்னு கேட்டுக்கிட்டிருக்காங்க"
"கேப்டன் என்ன சொன்னாராம் ? "
"கிட்டத்தட்ட சம்மதம்தான்"
"எப்படி சொல்ற... ? பேரம் முடிவாயிடுச்சா ? "
"சொல்றேன் பொறு. திருச்சி சிவாவை மாநிலங்களவை உறுப்பினரா கருணாநிதி அறிவிச்சிருக்காரே பாத்தியா ? " என்று எதிர் கேள்வி கேட்டான் தமிழ்.
"பாத்தேன்டா. எப்படி திமுக ஜெயிக்க முடியும் ? திமுக வசம் போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லையே ? திமுக எம்.எல்.ஏக்கள் 23, புதிய தமிழகம் 1, மனித நேய மக்கள் கட்சி 2. மொத்தத்தில் 26 எம்.எல்.ஏக்கள் மட்டும்தானே இருக்காங்க.. அப்புறம் எப்படி ?" என்று வியப்பாக கேட்டான் பீமராஜன்.
"அங்கேதான் கருணாநிதியின் சூட்சுமம் இருக்கு. திருச்சி சிவாவை வேட்பாளரா அறிவிச்சதன் மூலமா, தேமுதிக தங்கள் பக்கம் இருக்குன்றதை சூசகமா சொல்லிக் காட்றார்"
"தேமுதிக - திமுக கூட்டணி அப்போ இறுதியாயிடுச்சா ? "
"கூட்டணி இறுதியாயிடுச்சு. ஆனா, திருச்சி சிவா எம்.பி ஆகப்போறதில்லை"
"என்னடா சொல்ற... ? அவர்தான் திமுக மாநிலங்களவை வேட்பாளர்னு அறிவிச்சிட்டாங்களே ? " என்று அதிர்ச்சியாக கேட்டான் ரத்னவேல்.
"என்னடா நீ... இத்தனை நாளா பத்திரிக்கையாளரா இருந்துக்கிட்டு கருணாநிதியை புரிஞ்சுக்காம பேசறியே... திருச்சி சிவா என்ன கருணாநிதி குடும்ப உறுப்பினரா ? அவர் திமுக உறுப்பினர்தானே ? தேமுதிக, திமுக கூட்டணிக்கு வர்றதுக்கு, கேப்டன் விதிச்ச நிபந்தனை, சுதீஷை எம்.பியாக்கனும் ன்றதுதான்"
"இதுக்கு திமுக தரப்பில் ஒத்துக்கிட்டாங்களா ? "
"ஒத்துக்கலைன்னா வேற வழி.... ? பல ஆண்டுகால பாரம்பரியம் மிக்க திராவிட முன்னேற்றக் கழகம், நேற்று கட்சி தொடங்கிய தேமுதிகவிடம் கெஞ்சுகையில், எத்தனை பலவீனமான நிலையில் திமுக இருக்கிறது என்பது தெரிகிறது. வேறு வழியில்லாத நிலையில் ஒத்துக் கொண்டே தீருவார்கள்"
"சரி.. அதுக்கு திருச்சி சிவாவை வேட்பாளரா அறிவிக்காமலே இருந்திருக்கலாமே... ? " என்று தன் சந்தேகத்தைக் கேட்டான் வடிவேலு.
"இந்த இடத்தில்தான் கருணாநிதியின் காய் நகர்த்தல்களை கவனமா பார்க்கணும். பல வழிகளில் பலருக்கு செக் வைத்திருக்கிறார் கருணாநிதி. சிவாவை வேட்பாளரா அறிவித்ததன் மூலமா, காங்கிரஸுக்கு மறைமுகமான அழைப்பு. விஜயகாந்துக்கு நேரடியான அழைப்பு. காங்கிரசோடு கூட்டணி கூடாது என்று சொல்லும் ஸ்டாலினுக்கு செக். நான் இருக்கும் வரை நான்தான் தலைவர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
விஜயகாந்துக்கும் ஒரு வகையில இது செக். கூட்டணிக்கு வந்தால், சுதீஷ் எம்.பியாவார். திருச்சி சிவாவை தியாகம் பண்ணக் கூட கழகம் தயாராக இருக்கிறது என்று சொல்வதற்காகவும் இருக்கும்."
"காங்கிரஸ் கூட கூட்டணி வைக்கிற ஐடியா இன்னும் தலைவருக்கு இருக்கா ?"
"திமுக, காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட ஒரு வலுவான கூட்டணியை அமைக்கலாம்னு திட்டம் போட்டிருக்கார் கருணாநிதி."
"வாக்கு வங்கி சதவிகிதத்தை வைத்துப் பார்க்கும்போது, இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி மாதிரிதான் தெரியுது"
"அது மட்டுமில்ல. விஜயகாந்த் கேட்கும் 500 கோடியை தருவதற்கு திமுக தயாராக இல்லை. காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்தால், விஜயகாந்த் கேட்கும் 500 கோடி மட்டுமில்லாம, மொத்த கூட்டணியோட தேர்தல் செலவையும் காங்கிரஸ் தலையில கட்டிடலாம்னு ப்ளான் போட்றார். "
"காங்கிரஸ் அவ்வளவு தொகை கொடுப்பாங்களா ? " என்று வியப்பாக கேட்டான் பீமராஜன்.
"என்னடா பேசற... ? காங்கிரஸ் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு அனாதைப் பிணம். பணம் வைச்சிருந்தாலும் யாரும் கிட்ட சேக்க மாட்டேங்கிறாங்க. இப்படிப்பட்ட சூழல்ல, இந்தக் கூட்டணியில போனா, கவுரவமா இருக்கும்னு நினைக்கிறாங்க. இதற்கான பூர்வாங்க வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு" savukku.net

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக