வியாழன், 23 ஜனவரி, 2014

40 அடி உயர கோயில் இடிக்காமல் நகர்த்தப்பட்டது ! வேலூர் மாவட்டம் ஆம்பூர்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யனூரில் நாற்கர சாலையையொட்டி 100 ஆண்டுகள் பழமையான பெத்தபலி அம்மன் கோயில் உள்ளது. இந்த நாற்கர சாலை ஆறு வழிச்சாலை விரிவாக்கம் காரணமாக 40 அடி உயரம்கொண்ட கோயில் கோபுரத்தை நகர்த்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.இதற்காக கிராம மக்கள் கூடி இடிக்காமல் கோயிலை நகர்த்த அரியானா மாநிலத்தை சேர்ந்த டிடிபிடி என்ற தனியார் நிறுவனத்தை அணுகினர். ரூ.3 லட்சம் மதிப்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் ஜனவரி 2ம் தேதி இதற்கான ஆயத்த பணிகள் துவங்கியது. இதற்காக 300 சதுர அடி பரப்பளவிலான கோயில் கோபுரத்தின் அடியில் கடந்த இரு வாரங்களாக ஜாக்கிகள் பொருத்தும் பணி நடந்தது. பின்னர், கட்டைகளில் ஜாக்கிகள் மேல் வைத்து பெரிய பேரிங்குகள் கொண்டு ரயில் தண்டவாளத்தின் மீது ரயில் செல்வது போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினர்.
மேலும், இந்த கோபுரம் நிலை நிறுத்த சாலையில் இருந்து சுமார் 50 அடி தொலைவில் புதிய அஸ்திவாரம் போடப்பட்டு தயார் நிலையில் உள்ளது. நேற்று மாலை இந்த கோபுரத்தை நகர்த்த பக்கவாட்டில் இரும்பு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு ஜாக்கிகள் பக்கவாட்டில் செருகினர்.

பின்னர், அப்பகுதியினர் ஒன்று கூடி கோயில் கோபுரத்தை நகர்த்த பூஜை செய்தனர். பின்னர் ஜாக்கிகள் இயக்கப்பட்டு சுமார் அரை அடி தூரம் கோபுரத்தை நகர்த்தினர். இன்றும் தொடர்ந்து நடந்த இப்பணி நாளை முழுவீச்சில் துவங்கி சுமார் 10 அடி தூரம் நகர்த்தப்படும் என அப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தெரிவித்தனர்.கோயில் கோபுரம் நகர்த்தப்படுவதை அறிந்த அப்பகுதியினர் ஏராளமானோர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது .dinakaran.com/

கருத்துகள் இல்லை: