ஞாயிறு, 19 ஜனவரி, 2014

சுப்பிரமணிய சுவாமி முகநூல் (FACEBOOK்) மூலம் பொய் பிரச்சாரம்


புதுடில்லி, ஜன. 16- பொய்யான தகவல்களை பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதன் மூலம் பாரதீய ஜனதா கட்சியில் ஐக்கியமாகியுள்ள சுப்பிரமணியசுவாமி பல்வேறுபிரச்சனைகளுக்கிடையே யும் ஒற்றுமையாக இருந்து வரும் இந்து மற்றும் முஸ்லிம் சமுதாய மக்களி டையே வெறுப்பை ஏற்படுத்தி வரு கிறார். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குவதற்கும், சிலர் திட்டமிட்டு வன்முறைகளை உருவாக்கு வதற்கும் பயன்படுத்தி வருகிறனர். குறிப்பாக இளைஞர்கள் இந்த சமூக வலைத் தளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனை பாஜக முழுமையாக பயன்படுத்தி எப்படியாவது மோடியை பிரதமராக்கிட வேண்டும் என்ற முயற்சி யில் பல்வேறு அவதூறுகளையும், பொய்களையும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. வரலாறுகளையே திரித்துக் கூறி வருகிறது. மேலும் பல அய்டி நிறுவனங்களையே குத்தகைக்கு எடுத்து அதன் வழியாக இது போன்ற இழி செயல்களில் பாஜக ஈடுபட்டு வருவதை சமீபத்தில் கோப்ரா போஸ்ட் இதழ் அம்பலப்படுத்தியது. மோடியின் பொய்ப் பிரச்சாரப்படையில் ஜனதா கட்சியின் தலைவராகவும், தொண்ட ராகவும் இயங்கி வந்த சுப்பிரமணிய சுவாமி தற்போது அய்க்கியமாகியுள்ளார்.
அவர் தனது பேஸ்புக் கணக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இஸ்லாமி யர்களுக்கு எதிராக இந்துக்களை வன் முறைக்கு தூண்டிவிடும் வகையில் பொய்த் தகவலை வெளியிட்டுள்ளார்.
அவரது பேஸ்புக் கணக்கில் வெளியிடப் பட்டுள்ள புகைப்படம் ஒன்றில், நீண்ட தடிகளுடன் இருக் கும் வாலிபர்கள், மற்றவர்களைத் தாக்குவதுபோல் உள்ளது. இதன் குறிப்பாக, வங்காளதேசத்தில் இந்துக் கள் முஸ்லிம்களால் தாக்கப்படுகின் றனர். தற்போதைய வங்காளதேச மக்கள் தொகை யில் 8 சதவிகிதம் பேர் இந்துக்கள் (இது 1941ல் 28 சதவிகிதமாக இருந்தது) என்று எழுதப்பட்டுள்ளது. இந்தப் பதிவை ஆயிரக்கணக்கான மோடியின் இணையதள பிரச்சாரக் குழுவினர் லைக் தெரிவித்துள் ளதோடு, அதனை விஷமத்தனமாக மற்றவர் களுக்கும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை யில், இந்தப் புகைப்படம் வங்காளதேசத்தில் பொதுத்தேர்தலின் போது வாக்களிக்கச் சென்றவர்களை எதிர்க்கட்சியின் ஆதர வாளர்கள் தாக்கிய போது எடுத்தபடம். இதனை குஜராத்தின் உண்மை என்ற பேஸ்புக் கணக்கில் நண்பராக இருக்கும் யூனுஸ் என்பவர் கண்டறிந்து, உண் மையை வெளிக் கொண்டு வந்துள்ளார். இதற்கு சான்றாக வாஷிங்டன் போஸ்டில் வெளி யிடப்பட்டிருந்த இந்தப் புகைப் படத்தை அவர் இணைத்துள்ளார். அதில், வங்காளதேசத் தில் நடைபெற்ற பொதுத் தேர்தலை எதிர்க்கட்சியான வங்காள தேச தேசியக் கட்சி புறக்கணித்திருந்த நிலையில், தேர்தலில் வாக்களிக்கச் சென்ற வாக் காளர்களை அக்கட்சியின் ஆதரவாளர் கள் தாக்கியதாகவும், வாக்காளர்கள் வாக் களிப்பதற்காக காவல்துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி மீண்டும் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்கைப் பெறும் மலிவான அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.முன்னதாக, பாஜகவிற்கு தனது ஆதரவைத் தெரி வித்த சர்ச்சை சாமியாரான பாபா ராம்தேவ், தனது பேஸ்புக் கணக்கில், முன்னாள் பிரதமர்களான ஜவஹர் லால் நேரு மற்றும் லால்பகதூர் சாஸ்திரி தொடர்பான படங்களை வெளியிட்டு, போலியான தகவல்களை தெரிவித் திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, இதற்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல் அப்புகைப் படங்களை தனது பக்கத்திலிருந்து நீக்கி யது குறிப்பிடத்தக்கது. இது போன்று திட்டமிட்டு இந்து முஸ்லீம் மக்களிடையே வன் முறையை உருவாக்கும் சுப்பிரமணிய சுவாமி, சாமியார் ராம்தேவ் உள்ளிட்டவர் கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 (எ) பிரிவின் படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயன்பாட் டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
viduthalai.in

கருத்துகள் இல்லை: