டெல்லி: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவின் உடலில்
ஏற்பட்டுள்ள காயங்கள், அவர் கடைசி நேரத்தில் யாருடைய பிடியிலிருந்தோ
தப்பிக்கப் போராடியபோது ஏற்பட்ட காயங்கள் என்று புதிய தகவல்
வெளியாகியுள்ளது. இதனால் அவர் யாரிடமிருந்து தப்ப முயன்றார் என்ற கேள்வி
எழுந்துள்ளது.
விஷம் காரணமாகவே சுனந்தா இறந்துள்ளார் என்று ஆர்.டி.ஓ. விசாரணையில் தெரிய
வந்துள்ளது. இந்த விஷம் சுனந்தாவுக்குக் கொடுக்கப்பட யார் காரணம் என்பது
குறித்து விசாரிக்குமாறும் டெல்லி காவல்துறைக்கு ஆர்டிஓ
பரிந்துரைத்துள்ளார்.
இந்த நிலையில் சுனந்தாவின் உடலில் காணப்பட்ட காயங்கள் குறித்து புதுத்
தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட காயங்கள்
சுனந்தாவின் உடலில் காணப்பட்டன. இவை கடைசி நேரத்தில் யாரிடமிருந்தோ தப்ப
சுனந்தா போராடியபோது ஏற்பட்ட காயங்களாக இருக்கலாம் என்று தற்போது பரபரப்பு
எழுந்துள்ளது.
உடல் ரீதியாக யாருடனோ சுனந்தா போராடியபோது இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம்
என்று டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கருத்து தெரிவி்த்துள்ளனர். மரணத்திற்கு
சில மணி நேரங்களுக்கு முன்பு இது நடந்திருக்கலாம் என்றும் அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த வழக்கில் இதுவரை 11 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சசி தரூர், அவரது உதவியாளர் ராஜேஷ் குமார், ஆலோசகர் சிவக்குமார், சுனந்தாவின் இரு சகோதரரக்ள், அவரது மகன் சிவ் மேனன், இரண்டு டாக்டர்கள்,
னா
tamil.oneindia.in
இதற்கிடையே, இந்த வழக்கில் இதுவரை 11 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சசி தரூர், அவரது உதவியாளர் ராஜேஷ் குமார், ஆலோசகர் சிவக்குமார், சுனந்தாவின் இரு சகோதரரக்ள், அவரது மகன் சிவ் மேனன், இரண்டு டாக்டர்கள்,
னா
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக