புதன், 22 ஜனவரி, 2014

வசூலிக்கப்பட்ட பணம் எங்கே? கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கேள்வி


புதுடெல்லியில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் காவல்துறை விவகாரத்தில் மோதல் போக்கு நிலவி வருகிறது. டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக் கொடுமையில் பெண் உயிரோடு கொளுத்தப்பட்ட விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்க தவறிய 4 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங், கெஜ்ரிவால் சட்டத்திற்கு மதிப்பளிக்க போவதும் இல்லை, பின்பற்றபோவதும் இல்லை. அதனால் நான் அவர் செய்வதினால் எந்த அதிர்ச்சியும் அடையவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் “நான் முதலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பில் வசூலிக்கப்பட்ட பணம் எங்கே சென்றது? மக்கள் அவர்களை தேர்வு செய்தனர். அவர்களை மக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: