The Tellippalai Trail Cancer Hospital டிரைல் அமைப்பு தேவேந்திர
முனையிலிருந்து பருத்தித்துறை வரை பாதயாத்திரையொன்றை நடத்தி
தெல்லிப்பழையில் புற்றுநோய் வைத்தியசாலையொன்றை
நிர்மாணித்துள்ளது.
மனிதனை ஆட்டிப்படைக்கும் பல்வேறு மோசமான நோய்கள் இருந்தாலும் –
மரணிக்கும் தினத்தை முன்கூட்டியே அறிவித்துவிட்டு கொஞ்சம்
கொஞ்சமாக கொல்லும் ஒரே நோய் புற்றுநோயாகத்தான் இருக்கும்.
இலங்கையிலும் புற்றுநோயின் ஆதிக்கம் வருடாந்தம் அதிகரித்து
வருகிறது.
வருடாந்தம் 15 ஆயிரம் பேர் வரை புற்று நோய்க்கு இலக்காகி வருகின்றனர்.
இந்நோயுடன் வாழும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே இந்த டிரைல்
அமைப்பு இலங்கையில் தென்பகுதியில் அமைந்துள்ள தேவேந்திர முனையிலிருந்து
பருத்தித்துறை வரை பாதயாத்திரையொன்றை நடத்தி தெல்லிப்பழையில்
புற்றுநோய் வைத்தியசாலையொன்றை நிர்மாணித்துள்ளது.
இன்று 19 ஆம் திகதி ஜனாதிபதியால் இவ்வைத்தியசாலை திறந்து
வைக்கப்படவுள்ளது. இது குறித்து டிரைல் அமைப்பின்
ஸ்தாபகர்களில் ஒருவரும் மாஸ் இன்டிமேட் நிறுவன பிரதம நிறைவேற்று
அதிகாரியுமான நாதன் சிவகனநாதனுடன் நடத்தப்பட்ட
செவ்வியொன்றிலேயே அவர் இக்கேள்விகளுக்கான பதிலைத்
தெரிவித்தார்.
கேள்வி: புற்றுநோய் வைத்தியசாலையை அமைப்பதற்காக பாதயாத்திரை சென்று நிதி திரட்டும் எண்ணம் எப்படி உங்களுக்கு உருவானது ?
பதில்:
யுத்தம் முடிவடைந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டால்
தேவேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை பாதணி எதுவுமின்றி
நடக்கப்போவதாக எனது நண்பரான சரித்த உணம்பு (Sarinda Unamboowa)
என்னிடம் ஒருதடவை கூறியிருந்தார்
Sarinda Unamboowaஎன்னிடம் ஒருதடவை கூறியிருந்தார். 2009 ஆம் ஆண்டு
யுத்தம் முடிவடைந்தது. அந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக 2011 இல்
பாதயாத்திரை செல்ல அவர் திட்டமிட்டார். அவருடன் நானும்
பருத்தித்துறை வரை நடப்பதற்கு உடன்பட்டேன்.
2006 ஆம் ஆண்டு எனது சகோதரி பாரிய புற்றுநோயினால் இறந்தார்.
இதனைக்கருத்திற் கொண்டு பாதயாத்திரையின் மூலம் நிதியை திரட்டி
அதனூடாக புற்றுநோயாளர்களுக்கு உதவ முன்வந்தோம்.
இந்த நிலையில் நாம் 2008 இல் கலர்ஸ் ஒப் கரேஜ் என்ற பெயரில்
நிதியமொன்றை அமைத்து அதனூடாக புற்றுநோயாளிகளுக்கு உதவி செய்து
வந்தோம். ஆனால் இதற்கு குறைந்தளவு நிதியே சேர்ந்தது. இதனைப்
பயன்படுத்தி 2010 ஆம் ஆண்டு மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில்
மருத்துவ அவசர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை
எடுத்தோம். அதன் அடுத்த இலக்காகவே புற்றுநோய் வைத்தியசாலையொன்றை
கட்டும் நோக்கம் எமக்கு உருவானது.
கேள்வி: இப்புற்றுநோய் வைத்தியசாலையை யாழ்ப்பாணத்தில் நிர்மாணிப்பதற்கான விசேட காரணம் என்ன ?
பதில்: இலங்கையில் குறிப்பாக மஹரகமவில் மட்டுமே புற்றுநோய் வைத்தியசாலை இருக்கிறது. வடக்கு கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இருந்து வரும் புற்று நோயாளர்கள் குடும்பத்துடன் இங்கு வந்து தங்கியே சிகிச்சை பெற நேரிடுகிறது. சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்காக தொழிலையும் விட்டு விலகி மூன்று நான்கு மாதங்களாக வைத்தியசாலையில் தங்குவதுண்டு.
பதில்: இலங்கையில் குறிப்பாக மஹரகமவில் மட்டுமே புற்றுநோய் வைத்தியசாலை இருக்கிறது. வடக்கு கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இருந்து வரும் புற்று நோயாளர்கள் குடும்பத்துடன் இங்கு வந்து தங்கியே சிகிச்சை பெற நேரிடுகிறது. சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்காக தொழிலையும் விட்டு விலகி மூன்று நான்கு மாதங்களாக வைத்தியசாலையில் தங்குவதுண்டு.
இவர்களின் குடும்ப கட்டமைப்புக்கள் சிதைவதோடு வருமான வழிகளும்
தடைப்பட்டு வருகின்றது. யுத்த காலத்தில் வடபகுதியிலுள்ள புற்று
நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாமல் பெரும் கஷ்டங்களுக்கு
ஆளாகின்றார்கள். இதனாலே தெல்லிப்பழையில் புற்றுநோய்
வைத்தியசாலையொன்றை அமைக்க முடிவு செய்தோம்.
கேள்வி: பாதயாத்திரை சென்று பெருமளவு நிதி திரட்டுவது என்பது கடினமான விடயம். எவ்வாறு இது சாத்தியமானது-?
பதில்: சுமார் பத்து பேர் வரையில் சேர்ந்தே தேவேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை வரை நடப்பதற்கு முதலில் திட்டமிட்டோம். ஒரு மில்லியன் டொலர் திரட்டுவதே எமது இலக்காக இருந்தது. இதற்காக அனுசரணை பெறபலரை நாடினாலும் யாரும் முன்வரவில்லை. இதனால் 2011 ஜனவரி மாதத்தில் பாதயாத்திரை செல்லும் எமது திட்டத்தை உரிய காலத்தில் ஆரம்பிக்க முடியவில்லை.
பதில்: சுமார் பத்து பேர் வரையில் சேர்ந்தே தேவேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை வரை நடப்பதற்கு முதலில் திட்டமிட்டோம். ஒரு மில்லியன் டொலர் திரட்டுவதே எமது இலக்காக இருந்தது. இதற்காக அனுசரணை பெறபலரை நாடினாலும் யாரும் முன்வரவில்லை. இதனால் 2011 ஜனவரி மாதத்தில் பாதயாத்திரை செல்லும் எமது திட்டத்தை உரிய காலத்தில் ஆரம்பிக்க முடியவில்லை.
இது குறித்து நானும் எனது நண்பன் உனம்புவும் நாம் பணிபுரியும் மாஸ்
ஹோல்டிங் கம்பனியில் வைத்து பகலுணவு வேளையில் கதைத்துக்
கொண்டிருந்தோம். இந்த விடயத்தை அறிந்த எனது நிறுவன ஸ்தாபகர் மகேஷ்
அமலியன் உடனடியாக 10 மில்லியன் ரூபா இதற்காக வழங்கினார். மொபிடெல்
நிறுவனம் விளம்பரங்களினூடாக 20 மில்லியன் ரூபா வழங்க
முன்வந்தது.
கேள்வி: புற்றுநோய் வைத்தியசாலை அமைக்க பாதயாத்திரை மூலம் மட்டுமா நிதி திரட்டப்பட்டது ?
பதில்: இல்லை. இதற்கென டிரைல் என்ற பெயரில் வித்தியாசமான இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டது. உலகம் பூராகவும் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் இதில் இணைந்து தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர். பாதயாத்திரையில் பங்குபற்ற விரும்புபவர்களும் இதில் தம்மை பதிவு செய்து கொண்டனர். இணையத்தளத்தினூடாக இந்த சமூக சேவை குறித்து பரவலாக பிரபலமடைந்தது. இதனூடாக சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட முடிந்தது.
கேள்வி: புற்றுநோய் வைத்தியசாலை அமைக்க பாதயாத்திரை மூலம் மட்டுமா நிதி திரட்டப்பட்டது ?
பதில்: இல்லை. இதற்கென டிரைல் என்ற பெயரில் வித்தியாசமான இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டது. உலகம் பூராகவும் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் இதில் இணைந்து தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர். பாதயாத்திரையில் பங்குபற்ற விரும்புபவர்களும் இதில் தம்மை பதிவு செய்து கொண்டனர். இணையத்தளத்தினூடாக இந்த சமூக சேவை குறித்து பரவலாக பிரபலமடைந்தது. இதனூடாக சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட முடிந்தது.
கேள்வி: தேவேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரையான
பாதயாத்திரை எப்படி வெற்றியளித்தது. எத்தகையோர் இதற்குப்
பங்களித்தனர் ?
பதில்:
இப் புற்றுநோய் வைத்தியசாலையை அமைப்பதற்காக 2 மில்லியன் அமெரிக்க டொலரைத்
திரட்டும் நோக்கத்துடன் இலங்கையின் தென்பகுதியில் அமைந்துள்ள தெய்வேந்திர
முனையிலிருந்து வடபகுதி பருத்தித்துறை முனை வரை 670 கிலோ மீற்றர் வரை நான்
உட்பட 11 பேர் மட்டுமே தான் முழுமையாக நடந்தோம். 35 ஆயிரம் பேர் இந்தப்
பாதயாத்திரையில் ஈடுபட்டனர். இது தவிர 250.000 பேர் வீதியோரம்
இருந்து வேறு வழிகளிலும் இதற்கு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
முப்படையினரும் எமக்கு உதவியுள்ளனர்.
உண்டியல் மூலமும் நிதி சேகரிக்கப்பட்டது. ஒரு ரூபா முதல் பல்வேறு
தொகையை முடிந்தளவில் மக்கள் வழங்கியிருந்தனர். இவ்வாறாக
மாத்திரம் 10 மில்லியன் ரூபா திரட்ட முடிந்தது.
ரட்னா ரெட்டி ஐட்கென் ஸ்பென்ஸ் அன்ட் கம்பனி விமிட்டட்டின் தலைவர்
சிவரட்னம் என்பவரின் மனைவி மெரோபி ஒன்றரை வருடங்களுக்கு முன்னர்
புற்றுநோய்க்குபலியாகியிருந்தார். . மற்றும் அவர்களின் மகன் மொமேஷையும்
புற்றுநோய் பலிகொண்டிருந்ததனால் இவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட
நோயாளிகளுக்காக நன்கொடை கொடுத்துதவினார்கள்..
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மீள்குடியேறிய எதுவித வசதிகளும்
அற்ற மக்கள் முதற்கொண்டு பிச்சைக்காரன் வரை புற்றுநோய்
வைத்தியசாலையை கட்ட பங்களித்திருப்பது ஒரு விசேட அம்சமாகும்.
ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட பாரிய உண்டியலில் வவுனியாவில்
வைத்துப் பிச்சைக்காரர் ஒருவர் ஒரு ரூபா இட்டது அனைவரையும்
ஆச்சரியப்படுத்தியது. இத்தனைக்கும் அவர் ஒரு அங்கவீனர்.
இதேபோன்று குருநாகல் யாப்பகூவ பகுதியில் வைத்து வறிய சிறுமி ஒருத்தி
வீட்டில் பணம் சேர்த்த உண்டியலை பாதயாத்திரையில் சென்ற மஹேல
ஜெயவர்த்தனவிடம் கொடுத்தார்.
கிளிநொச்சியில் காலை 6 மணிக்கு எமது பாதயாத்திரை
ஆரம்பிக்கப்பட்டது. மீள்குடியேற்றப்பட்டு கொட்டிலில் வாழும்
மூன்று சிறு பிள்ளைகள் நூறு ரூபாவொன்றை அன்பளித்தது
பாதயாத்திரையில் சென்றவர்களை கண்கலங்க வைத்தது.
பாதயாத்திரை முடிவடைந்து ஒரு வருடத்தின் பின்னர் அந்த குழந்தைகளை
ஒவ்வொருவரையும் தேடிப்பிடித்து கற்பதற்குத் தேவையான வசதிகளை
அவர்களுக்கு பெற்று கொடுத்தோம். அவர்களுடைய பெற்றோருக்கும் தொழில்
வாய்ப்பு பெற்றுக் கொடுத்துள்ளோம்.
இந்த யாத்திரையின் போது சிங்களம், தமிழ் , முஸ்லிம் , சிறிஸ்தவர் என்ற
பாகுபாடின்றி சகல இன மதத்தவர்களும் தமது பங்களிப்பை
இன்முகத்துடன் வழங்கியிருந்தனர். இலங்கையில் சகலரதும்
பங்களிப்புடன் பாதயாத்திரை மூலம் வைத்தியசாலையொன்றை
கட்டியிருப்பது இதுதான் முதற்தடவை எனலாம். ஒரு இலட்சம் ரூபா
காசோலையை விட ஒரு ரூபா அன்பளிப்பே எமக்குப் பெறுமதியாகத்
தோன்றியது.
இது தவிர நாட்டில் அநேகமான மக்களுக்கு புற்றுநோய் குறித்து
விழிப்புணர்வூட்ட இந்தப் பாதயாத்திரை பெரும் வாய்ப்பாக அமைந்தது.
பதில்
: வடபகுதி மக்களுக்காக தென்பகுதி மக்கள் இவ்வாறு உதவுவார்கள் என
யாரும் நம்பியிருக்கவில்லை. யுத்தம் முடிவடைந்து சில மாதங்களிலே
இந்த பாதயாத்திரை நடந்தது. ஆனால் தென்பகுதி மக்கள் ஆர்வமாக இதற்கு
உதவினர். முடிந்தளவு பணத்தாலும் பொருளாலும் பங்களித்தனர்.
முடியாதவர்கள் உள்ளத்தால் ஆதரவை வெளிப்படுத்தினர்.
இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் இது உதவியது.
கேள்வி: டிரைல் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் தற்போதைய நிலை என்ன ?
பதில்:
2012 ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலை
நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளன. 300 மில்லியன் ரூபா செலவில் 5
ஏக்கர்
15 ஆயிரம் சதுர அடி விஸ்தீரணம் கொண்டதாக இவ் வைத்தியசாலை
அமைக்கப்பட்டுள்ளது. 120 கட்டில்களுடன் கூடிய இந்த
வைத்தியசாலை சிறுவர்களுக்கென பிரத்தியேகமான வசதிகள்
செய்யப்பட்டுள்ளன. வைத்தியசாலைக்குத் தேவையான உபகரணங்களை பலர்
இலவசமாக வழங்கினர்.
அரசாங்கம் இரு நவீன உபகரணங்களை தருவிக்க நடவடிக்கை
எடுத்துள்ளது. இதற்கென தனியான பிரிவொன்றை நிர்மாணிக்க அரசாங்கம்
தயாராகிறது. எதிர்வரும் 19 ஆம் திகதி வைத்திசாலையை நாம்
அரசாங்கத்திடம் கையளிக்கிறோம். ஜனாதிபதி இதனைத் திறந்து
வைக்கவுள்ளார்.
இரு நவீன உபகரணங்களும் இங்கு பொருத்தப்பட்ட பின்னர் மஹரகம
புற்றுநோய் வைத்தியசாலையைவிட நவீன வசதிகள் கொண்டதாக டிரைல்
தெல்லிப்பழை வைத்தியசாலை இயங்கும். வடபகுதி மக்களுக்கு இனி
கொழும்புக்கு வர வேண்டிய தேவை ஏற்படாது.
கேள்வி: புற்றுநோய்க்கு எதிரான உங்கள் முதல் வெற்றியையடுத்து அடுத்த திட்டம் என்ன என்பது பற்றி கூறமுடியுமா -?
பதில்:
வடக்கிலிருந்து தெற்குவரை பாதயாத்திரை சென்று தெற்கில் புற்றுநோய்
வைத்தியசாலையொன்றை நிர்மாணிப்பதே எமது அடுத்த இலக்காகும்.
இதற்கும் சகலரும் பங்களிப்பர் என நம்புகின்றோம். நாம்
தெல்லிப்பழைவைத்தியசாலையை அமைக்க பங்களித்தாலும் எமது பெயர்
வைத்தியசாலையில் எங்கும் பதியப்படவில்லை. சமூகத்துக்கு எம்மால்
முடிந்த பங்களிப்பையே வழங்கியுள்ளோம் என தெரிவித்தார்.
முக்கிய குறிப்பு
வெளிநாடுகளில்.. புலம்பெயர் தமிழர்கள் 10 இலச்சம் பேர் இருக்கிறார்களாம். இதுவரை நாட்டுக்காக, ஊருக்காக என்ன செய்திருக்கின்றார்கள்? (தங்களுடைய சொந்தக்காரர்களுக்கு செய்ததை தவிர்த்து)
முக்கிய குறிப்பு
வெளிநாடுகளில்.. புலம்பெயர் தமிழர்கள் 10 இலச்சம் பேர் இருக்கிறார்களாம். இதுவரை நாட்டுக்காக, ஊருக்காக என்ன செய்திருக்கின்றார்கள்? (தங்களுடைய சொந்தக்காரர்களுக்கு செய்ததை தவிர்த்து)
யாருக்காவது ஒரு ஏழையானவனுக்கு வீடுகட்டிக் கொடுத்திருக்கிறார்களா?
ஆகக்குறைந்தது ஒரு வெத்திலைக்கடையாவது
போட்டுக்கொடுத்திருக்கிறார்களா? தமிழகத்திலிருக்கும் போலி
அரசியல்வாதிகளுக்கும், சினிமாகாராகளுக்கும், வெளிநாடுகளிலிருந்து ஊரை
முறிச்சு திண்டு, பிழைப்பு நடத்துகிற புலிப்பினாமிகளுக்கும்,
பூசாரிகளுக்கும் அள்ளிக் காசைக்கொடுத்து அவர்களை வாழவைத்ததை தவிர
வேறெதை செய்தார்கள்?
வெளிநாட்டில் உள்ளவர்கள் என்ன சாதனை செய்தார்கள் என்றால்?
புலிகளுக்கு காசுக்குமேல் காசுகொடுத்து அவர்களுடைய போராட்டத்தையும் கெடுத்தார்கள்.ilakkiyainfo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக