தி.மு.க.,வில் அழகிரி - ஸ்டாலின் மோதல், ஒரு பக்கத்தில் சூடு
பிடித்துள்ள நிலையில், ராஜ்யசபா வேட்பாளராக, கனிமொழி ஆதரவாளரான திருச்சி
சிவா அறிவிக்கப்பட்டுஉள்ளதை அடுத்து, ஸ்டாலின் தரப்பு கடும் அதிருப்தி
அடைந்துஉள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்த ஸ்டாலின், இது
குறித்த தன் கோபத்தை கொட்டித் தீர்த்துள்ளார்தி.மு.க., ஆதரவு தே.மு.தி.க.,வுடன்
கூ ட்டணி சேரும் திட்டத்தின் ஒரு கட்டமாக, ராஜ்யசபா தேர்தலில், அக்கட்சி
நிறுத்தும் வேட்பாளருக்கு, தி.மு.க., ஆதரவு அளிக்கும் என, கூறப்பட்டது. இரு
தரப்புக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் இது இடம்பெற்றது.
ஆனாலும், தே.மு.தி.க., தரப்பில் இருந்து, தி.மு.க.,வுக்கு சாதகமான,
'சிக்னல்' கிடைக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த தி.மு.க., தலைமை,
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவது என, தீர்மானித்தது. கடந்த ராஜ்யசபா
தேர்தலில், கனிமொழியை நிற்க வைத்து, காங்கிரஸ் ஆதரவை பெற்று, வெற்றி பெறச்
செய்தது போலவே, இந்த தேர்தலிலும், ஆதரவு திரட்டி விடலாம் என, கணக்கு
போடப்பட்டுள்ளது.
திருச்சி சிவா தான் சரியான தேர்வு. இதிலெல்லாம் புகைச்சல், கொதித்தல் என்றெல்லாம் செய்தி போட்டு விரக்தியை சிறப்பு நிருபர் ஏன் காட்டி கொள்கிறார்.
ஆரம்பத்தில் எதிர்ப்பு அதுப்பற்றிய விவாதம் கட்சிக்குள் நடந்தபோது, ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின், பின்னர், போட்டியிடுவதற்கு சம்மதம் அளித்தார். யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற கேள்வி வந்ததும், ஸ்டாலின், சிலரை பரிந்துரை செய்தார். ஏற்காடு இடைத் தேர்தல் பணிகளை கவனித்த, பொன் முத்துராமலிங்கம், ஆலந்துார் பாரதி, கடலுார் புகழேந்தி, மா.சுப்ரமணியன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்தார். இவர்களில் யாரையாவது வேட்பாளராக அறிவிக்குமாறு, கருணாநிதியிடம் அவர் கேட்டுக் கொண்டார்.ஸ்டாலின் கடுங்கோபம்:

ஆனால், ஸ்டாலின் சிபாரிசு செய்யாத, திருச்சி சிவாவை வேட்பாளராக, கருணாநிதி அறிவித்ததும், ஸ்டாலின் கடும் கோபம் அடைந்தார். அந்த கோபத்தை, கருணாநிதியிடம் கொட்டி தீர்த்து விட்டார் என, அவரது ஆதரவாளர்கள் கூறினர்.
இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது:கனிமொழியின் தீவிர ஆதரவாளர், திருச்சி சிவா. சமீபத்தில் நடந்த, கனிமொழி பிறந்த நாள் விழாவை, ஸ்டாலின் ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். ஆனால், திருச்சி சிவா, நேரில் சென்று வாழ்த்தினார். கனிமொழி பிறந்த நாள் பொதுக் கூட்டத்திலும் பேசியிருந்தார்.கனிமொழி பரிந்துரைஇந்த விசுவாசம் காரணமாக, திருச்சி சிவாவை வேட்பாளராக அறிவிக்கும்படி, கருணாநிதி யிடம், கனிமொழி பரிந்துரை செய்துள்ளார். மகன் சொன்னதை கேட்காமல், மகள் சொன்னதை கருணாநிதி செய்துள்ளார்.அந்த கோபத்தை தான், கருணாநிதியிடம், ஸ்டாலின் வெளிப்படுத்தி உள்ளார். திருச்சி சிவா, மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர். அவருக்கே மறுபடியும் எதற்காக வாய்ப்பு தர வேண்டும் என்பது தான் அவரது நியாயமான கேள்வி என்ன பதில் சொல்வது?'
ஒருவருக்கே திரும்ப பதவியை தந்து கொண்டிருந்தால், என்னை நம்பி கட்சிக்கு உழைப்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது?' என, கருணாநிதியிடம், ஸ்டாலின் கோபமாகவே பேசிஇருக்கிறார். அவரது எந்த கேள்விக்கும் கருணாநிதியால் பதில் சொல்ல முடியவில்லை. கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருந்திருக்கிறார்.இவ்வாறு, ஸ்டாலின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக