திங்கள், 20 ஜனவரி, 2014

10 நாள் ரோட்டிலேயே போராட போவதாக கெஜ்ரிவால் அறிவிப்பு ! ஷிண்டே அலுவலகம் முன் தர்ணா..


டெல்லி: கடமை தவறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அலுவலகம் முன்பு தர்ணா நடத்துவதற்காக கிளம்பிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரின் வாகனங்களை டெல்லி போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து 10 நாட்களுக்கு இங்கேயே இருந்து போராடப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளால் டெல்லியே குலுங்கிப் போயுள்ளது. முக்கிய அமைச்சரகங்கள் உள்ள பகுதியை ஆம் ஆத்மியினர் முடக்கி வைத்திருப்பதால் மத்திய அரசின் செயல்பாட்டையே கிட்டத்தட்ட அவர்கள் முடக்கத் திட்டமிட்டிருப்பது போல தெரிகிறது. ஷிண்டே அலுவலகம் முன் தர்ணா... கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்-10 நாள் ரோட்டிலேயே போராட போவதாக அறிவிப்பு தெற்கு டெல்லியின் மாள்வியா நகரில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி நடத்திய அதிரடி ரெய்டு தொடர்பாக, அவருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைப்போல சகர்பூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல்துறையினருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ராக்கி பிர்லாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவங்களால் அதிருப்தி அடைந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இதில் தொடர்புடைய 4 காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்யுமாறு காவல்துறை தலைவரை கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு காவல்துறை ஆணையர் பி.எஸ்.பஸ்சி மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை பின்னர் சந்தித்து பேசிய முதல்வர் கெஜ்ரிவால், ‘கடமையை செய்யாத காவல்துறையினரை இடைநீக்கம் செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினார். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகம் முன் 20ஆம் தேதி (இன்று) முதல்வர் தலைமையில் ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவர் என அக்கட்சி சார்பில் பின்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உள்துறை அமைச்சரின் அலுவலகம் அமைந்துள்ள டெல்லி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி டெல்லி மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடந்தால் அப்பகுதியில் கூட்டம் கூடாமல், உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் இன்று முற்பகலில் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கார்களில் தர்ணா செய்வதற்காகப் புறப்பட்டு வந்தனர். ஆனால் அவர்களை போலீஸார் ரயில் பவன் அருகே தடுத்து நிறுத்தினர். காரிலேயே உட்கார்ந்திருந்த கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தப்பட்ட கெஜ்ரிவால் காரிலேயே அமர்ந்திருந்தார். காரிலிருந்து அவர் இறங்கவில்லை. இதனால் பதட்டம் தொடர்ந்தது. பிற்பகல் 12 மணி வரை தடுப்புகள் அகற்றப்பட மாட்டாது. கெஜ்ரிவாலை அனுமதிக்க முடியாது. எப்பாடுபட்டாவது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம் என்று காவல்துறை தெரிவித்திருந்தது. அதேசமயம், கேட்டுகள் திறக்கப்படும் வரை காரை விட்டு இறங்கப் போவதில்லை என்று கெஜ்ரிவாலும் பிடிவாதமாக காரிலேயே அமர்ந்திருந்தார். பின்னர் அவர் கீழே இறங்கி வந்து பேசினார். 10 நாள் போராட்டம் அறிவிப்பு  அறிவிப்பு இந்த நிலையில் தற்போது 10 நாட்கள் இங்கேயே இருந்து போராடப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது. மேலும் தனது போராட்டத்தில் டெல்லி மக்களும் சேர்ந்து கொள்ளும்படியும் கெஜ்ரிவால் கூறியுள்ளதால் டெல்லி அதிர்ந்து நிற்கிறது. மேலும் போலீஸ் சட்டத்தில் சீர்திருத்தம் தேவை என்றும் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: