நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக-வுக்கு நிகராக கூட்டணி பலத்தை
திரட்டிவரும் பாஜக, தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக-வுடன் கூட்டணி அமைக்க
வியூகம் அமைத்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் ரகசிய
சர்வேயை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர் பாஜக-வின்
முக்கிய நிர்வாகிகள்.
ஆர்.எஸ்.எஸ். சர்வே
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாடு முழுவதும் அந்தந்த மாநிலக் கட்சிகளின்
செல்வாக்கு குறித்து ரகசிய சர்வே எடுத்து, அதனை பாஜக மேலிடத்துக்கு அனுப்பி
வருகிறது. டெல்லியின் நகர்ப்புறங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி
குறித்து சமீபத் தில் அந்த அமைப்பின் சர்வே முடிவுகள் காட்டின. அதன் பின்பே
கடந்த சில நாட்களாக டெல்லியில் பாஜக, ஆம் ஆத்மியை கடுமையாக விமர்சித்து
வருகிறது.
ந்நிலையில் தமிழக நிலவரம் குறித்து எடுக்கப்பட்ட சர்வேயின் அடிப்படையில்
பாஜகவுக்கு ஆலோசனை வழங்கி இருக்கும் ஆர்.எஸ்.எஸ்., ‘திமுக எதிர்க் கட்சியாக
இருந்தாலும் அதற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில்
திமுக கூட்டணி, கணிசமான தொகுதிக ளில் வெற்றிபெறும். என்னதான் சோவும் சு சாமியும் புகை அடித்தாலும் ஜெயாவை நம்பி சொந்த காசில் சூனியம் வைத்துகொள்ள பாஜக தயாரில்லையாம் ஜெயாவினால் வாஜ்பாய் அடைந்த துன்பம் அப்படி பட்டது
அதேசமயம், அதிமுக.வும்
திமுக.வுக்கு சம பலத்தில் இருக்கிறது. நாம் யாரையும் பகைத்துக்கொள்ள
வேண்டாம்’ என்று அறிவுறுத்தி இருக்கிறது.
மோடியுடன் சந்திப்பு
திமுக-வின் முக்கிய நிர்வாகி ஒருவர் கடந்த ஞாயிற்றுக் கிழமைக்கு முன்னதாக
நரேந்திர மோடியின் முகாமை சேர்ந்தவரை சந்தித்தார். அப்போது பாஜக தரப்பில்,
‘நாடாளுமன்றத் தேர்த லில் திமுக-வுடன் கூட்டணி வைக்க எங்களுக்குத் தடையாக
இருக்கும் ஒரே ஒரு விஷயம் 2 ஜி அலைக்கற்றை விவகாரம்தான். அதைத் தவிர்த்து
காங்கிரஸுக்கு எதிராக நாங்கள் பிரச்சாரம் செய்ய முடியாது.
திமுக-வுடன் பாஜக கூட்டணி சேர்ந்தால் 2ஜி பற்றி பேசமுடியாது. தேர்தலுக்கு
பின்பு பாஜக பெரும்பான்மையை நெருக்கி பிடித்துவிடும் என்ற நம்பிக்கை
இருந்தாலும் காங்கிரஸ் சில தந்திரங்களில் ஈடுபட்டு கவிழ்ப்பு வேலைகளை
செய்யலாம் என்கிற சந்தேகமும் இருக்கிறது.
அந்த சமயத்தில் திமுக பாஜகவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். அதற்கு பிரதி
பலனாக எதிர்காலத்தில் 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் திமுக-வுக்கு பாதகமற்ற
வகையில் பாஜக செயல்படும்’ என்று பேசப்பட்டதாகவும் இதை திமுக
ஏற்றுக்கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
திமுக-வை கண்டிக்காத பாஜக
இதன் எதிரொலி அண்மையில் டெல்லியில் நடந்த பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தின்
தீர்மானங்களிலும் தெரிந்தது. அதில் ஊழலை ஆதரிக்கும் கட்சிகள் என்று
காங்கிரஸுக்கு ஆதரவான பகுஜன் சமாஜ் மற் றும் சமாஜ்வாடி கட்சிகளை
வறுத்தெடுத்த பாஜக, திமுக-வை எதுவும் சொல்லவில்லை.
அதேபோல் 2ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும்
பிரதமருக்கும் பங்கு இருக்கிறது என்று குறிப் பிட்ட தீர்மானமானது
திமுக-வுக்கு அதிலுள்ள பங்கு குறித்து எதையும் சொல்லவில்லை.
அதேசமயம், அதிமுக-வையும் பாஜக பகைத்துக்கொள்ள விரும்ப வில்லை. ‘இரு
கட்சிகளுடனும் ஒட்டிக்கொள்ளவும் வேண்டாம்; ஒரேடியாக எதிர்க்கவும் வேண்டாம்.
தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இந்த இரண்டு கட்சிகளில் ஒன்று தங்களை
நிச்சயம் ஆதரிக்கும், என்பதே பாஜக-வின் மூடுமந்திரக் கணக்கு. tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக