திங்கள், 1 ஜூலை, 2013

கலைஞர் : திருநங்கைகளுக்கு அவமானம் இளைக்கும் மத்திய மாநில அரசுகள்


மூன்றாவது பாலினத்வராகிய
திருநங்கையினரை 9 என்ற எண் குறியிட்டு அவமானப்படுத்த வேண்டாம் என்று திமுக தலைவர் கலைஞர்
கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியா முழுவதும் ஆறாவது பொரு ளாதார கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்கள், சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரின் பெயர், தொழில், இருப் பிடம் போன்ற எல்லா விவரங்களையும் அதற்கான விண்ணப்பத்தில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் அந்தப் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண் தற்போது வழங்கப்பட் டுள்ளதாக புகார்கள் கூறப்படுகின்றன.
இந்தப் பிரச்சினை கடந்த சில ஆண்டு காலமாக திருநங்கையர்களுக்கு இருந்து வருகிறது. திமு கழக ஆட்சியிலே இதே பிரச்சினை எழுப்பப்பட்டபோது, திருநங் கையர்கள் மூன்றாவது பாலினம் என்பதைக் குறிப்பிடும் வகையில் அந்தப் படிவத்தில் ஆண்/பெண் என்பதற்கு எவ்வாறு M/F (Male/Female) என்று அச் சிடப்பட்டிருப்பதைப் போல, திருநங்கை யர்களைக் குறிக்கும் வகையில் T (Transgender) என்ற எழுத்து குறிப்பிடப் பட்டது.
முதல் முதலில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபற்றி அப்போதே 16.3.2008 தேதியில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ், “Third Sex gets its due in T.N. - Karuna Govt. is Country’s First to issue Ration cards with “T” as Gender”  என்ற தலைப்பில் பெரிதாக எழுதியிருந்தது.

ஆனால் தற்போது பொருளாதார கணக்கெடுப்பு படிவத்தில் ஆண் என்பதற்கு 1 என்றும், பெண் என்பதற்கு 2 என்றும் குறிப்பிட்டுவிட்டு, ஆண் பெண் அல்லாத பாலினப்பிரிவுக்கு 9 என்ற குறியீட்டு எண் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதைப்பற்றி அவர்கள் கூறும்போது, ஏற்கெனவே எங்களை அந்த 9 என்ற எண்ணைக் குறிப் பிட்டுத்தான் கிண்டல் செய்கிறார்கள். இப்போது அரசே அந்த எண்ணைக் குறிப்பிட்டிருப்பது எங்களை அவ மானப்படுத்துவதாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.
பொருளாதாரக் கணக்கெடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இதுபற்றிக் கேட்ட போது, இந்தப்படிவம் பற்றி மத்திய அரசில் தான் கேட்க வேண்டுமென்று சொல்லி யிருக்கிறார்கள். இந்தத் தவறை யார் செய்திருந்தாலும், மத்திய அரசு செய் திருந்தாலும், மாநில அரசு அதைப்பற்றி கேட்காமல் இருந்தாலும், உடனடியாக இதற்கு உரியவர்கள் இதனைக் கவனித்து இந்தத் தவறினைக் களைய ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலைஞர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.viduthalai.in

கருத்துகள் இல்லை: