வடிவேலு ரீஎன்ட்ரி கொடுக்கவிருக்கும் ஜகஜல புஜபல தெனாலிராமன் திரைப்படம் டிராப் ஆகிவிட்டது.... என்று ஒரு வதந்தி திரையுலகில் வேகமாக பரவி வந்தது. 3 கோடி ரூபாய் சம்பளம் பேசி, அதில் பாதியை வாங்கி விட்ட வடிவேலுவிற்கும் தயாரிப்பாளருக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், வடிவேலு மதுரைக்கு ரயில் ஏறி விட்டதாக பேசப்பட்டது.
வடிவேலு 42 மனைவிகளுடன் நடனமாடியிருக்கிறார். இந்த
திரைப்படத்தின் கதைப்படி தெனாலிராமனுக்கு 42 மனைவிகளாம். 42 மனைவிகளுக்கும்
பிறந்த 56 குழந்தைகளும் அந்த பாட்டில் வடிவேலுவுடன்
நடனமாடியிருக்கிறார்கள்.இப்படி பல வதந்திகள் உலாவந்துகொண்டிருந்த நிலையில் ஆடம்பரமான ஒரு செட் ஒன்றை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் அமைத்து அமர்க்களமாக படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள் ஜகஜல புஜபல தெனாலிராமன் படக்குழுவினர்.
பாடல்காட்சிக்காக போடப்பட்ட செட்டில் வடிவேலு 42 மனைவிகளுடன் நடனமாடியிருக்கிறார். இந்த திரைப்படத்தின் கதைப்படி தெனாலிராமனுக்கு 42 மனைவிகளாம். 42 மனைவிகளுக்கும் பிறந்த 56 குழந்தைகளும் அந்த பாட்டில் வடிவேலுவுடன் நடனமாடியிருக்கிறார்கள்.
வடிவேலுவின் அசத்தலான நடனத்துடன் முடிந்த அந்த பாடல் காட்சியைத் தொடர்ந்து தெனாலிராமன் படக்குழு அடுத்த ஷெடியூலுக்காக தென்தமிழகத்தின் பக்கம் செல்லவிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக