செவ்வாய், 2 ஜூலை, 2013

பாகிஸ்தானில் மழையில் நடனமாடிய 2 இளம்பெண்களும் தாயும் சுட்டுக்கொலை! Teenage Pakistani girls shot dead in honour killing for dancing in rain.

மழையை கண்ட ஆனந்தத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் போல ‘தந்தான தந்தான தந்தான தனனே..’ என்று துள்ளி ஆடிய சகோதரிகளை பாகிஸ்தான் பழமைவாதிகள் சுட்டுக்கொன்ற வெறிச்செயல், பெண்ணியக்க வாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மெலிதான தூரல் மழைக்கு இடையில் பாகிஸ்தானின் சிலாஸ் பகுதியை சேர்ந்த நூர் ஷேசா(16), நூர் பஸ்ரா(15) ஆகிய சகோதரிகள் சில சிறுவர் சிறுமிகளுடன் துள்ளி நடனமாடும் காட்சி சமீபத்தில் இணையதளங்களில் உலா வந்தன. உலகெங்கிலும் வாழும் ஆயிரக்கணக்கானோர் இந்த படப்பதிவை கண்டு மகிழ்ந்தனர். இந்நிலையில், இவர்களின் வீட்டுக்கு வந்த 5 பேர் காட்டு மிராண்டித் தனமாக அந்த பெண்கள் இருவரையும் அவர்களின் தாயார் நோஷரா என்பவரையும் ஈவிரக்கமற்ற அந்த பழமைவாத கும்பல் சுட்டுக்கொன்றது. குடும்ப கவுரவத்தை குலைத்ததாக கருதிய தனது பங்காளிதான் கூலிப்படையை ஏவி தங்கைகளையும், தாயையும் சுட்டுக் கொன்றதாக பலியான பெண்களின் அண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார் இதனால் தலைமறைவாக இருக்கும் குத்தோர் என்ற பழமைவாதியையும், இந்த படுகொலையை செய்த 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: