புதன், 3 ஜூலை, 2013

நடிகை நிஷா எய்ட்ஸ் நோயினால் மரணப்படுக்கையில் உதவுவார் யாருமில்லை


She was used by R.Mohan, producer of Iyer the Great, into prostitution
எயிட்ஸ் பிடித்த ஒரு பிரபல நடிகையின் கதை.. டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதா நாயகி யாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்க வில்லை. அப்படியே சில நாட்கள் அனாதை யாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்தார் நிஷா. நிஷா பிறந்த ஊரே நாகூர் தான். அவரது அப்பா, அத்தை, பெரியப்பா என ஓர் உறவு பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது, அதிர்ச்சியான செய்தி. பின்னர் ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் அட்மிட் செய்தனர். தன்னை சந்தித்த பத்திரிகை யாளரிடம், “சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். நான் மறுபடியும் நடிக்கணும்!” என்று கதறினா ர். சினிமா ஒளிவெள்ளத்தி ல் குளித்த ஒருவர், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சியது உறுத்திய து. நிஷாவிடம் பேசி னோம். என்னதான் எலும்பும் தோலுமாக இருந்தாலும் அவரது பேச்சில் ஒரு நடிகைக்குரிய நளினம் குறை யவில்லை. கூடவே குரலில் சோகத்தைக் கொட்டிக் குழைத்து நம்மிடம் பேசினார். ”எனக்குச் சொந்த ஊர் நாகூர்தான்.
அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க. பல படங்களில் ஹீரோ யினா நடித்தேன். அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடா மல் மெலிந்து விட்டேன். நடிக் கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. நிறை ய பேர் சான்ஸ் தரேன்னு எமாத்தினாங்க, எனக்கு சென்னை யில் உறவுன்னு சொல் லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை. நடிகர் சங்கத் தலை வராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனே ன். ‘உனக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி.வி.யில் நடிக்க வேண் டியது தானே’ன்னு சொல்லி, என்னை வெறும் கையோட திருப்பிய னுப் பிவிட்டார். நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ!” என்றார் கண்ணீ ருடன். ‘உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?’ என்று கேட்டோம். அதைக் கேட்டதும் சற்று கோப ப்பட்ட நிஷா, ”நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள். சொந்த ஊரில், பெற்ற தந்தை யின் கண்முன்னே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது’ என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார். அதன் பிறகு, ”சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை. ஒரு முட்டை புரோட்டா சாப்பிடணும் போல ஆசையாக இரு க்கு! ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்க ளேன், ப்ளீஸ்!” என்று கெஞ்சினார். எதோ உள்ளுக்குள் உடைந்து போனது. நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியா மல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது. நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரை சந்தித்து பேசியபோது, நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணினேன். சின்ன சண்டைல குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா. சென்னை யில் பேபிக்கு பலபேரோட தவறான தொடர்பிருந்தது. நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது. தேடிப் போன என்னை விரட்டி விட்டுட்டா. பிறகு நிஷாவும் நடிகை ஆகி எங்களை மறந்துட்டா, இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன். இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்? என்றார். சென்னையில் பல பேர் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது’ என்றார். அவ தைரியமான பொண்னு. ஒருமுறை இன்கம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே போலீசுக்கு போன் பண்ணிப் பிடித்துக்கொடுத்தாள். அப்படிப்பட்டவளுக்கா இப்படி ஒரு நிலை மை என்றார் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

ival seidhadhu thappunna ivala vachu mathavanga seidhadhukku peru enna....
Iraiva....