கர்நாடக
மாநிலத்தில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 224
தொகுதிகளில் பாஜக 110 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து
பாஜக தனித்து ஆட்சி அமைத்தது. காங்கிரஸ்
கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம் 28
தொகுதிகளில் வெற்றி பெற்றது. மற்றவர்கள் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். 2013
மே மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 121 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனி
மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறது. பாஜக 40 தொகுதிகளிலும், ம.ஜனதா தளம் 40
தொகுதிளிலும் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக ஜனதா தளம் 6 தொகுதிகளிலும்,
மற்றவர்கள் 16 தொகுதிளும் வெற்றி பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக