ஈரோடு மாவட்டம்
பு.புளியம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வன் (42). நாட்டு
மருத்துவரான இவர் நோயாளி ஒருவருக்கு மருந்து கொடுப்பதற்காக கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு சென்றுவிட்டு, நேற்று இரவு சேலம் திரும்பியுள்ளார். சிதம்பரத்தில் இருந்து சேலம் வரும் அரசு பேருந்தில் அவர் வந்துகொண்டிருந்தபோது, சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி என்ற இடத்தில் பேருந்து வந்தபோது, அந்த பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் பேருந்தின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. பேருந்துக்குள் பயணம் செய்து கொண்டிருந்த செல்வனின் தலையிலும் கல் அடி விழுந்துள்ளது.
இதில் மயக்கம் அடைந்த செல்வனை பேருந்தில் இருந்த நடத்துனர் மற்றும் சக பயணிகள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.கோமா நிலையில் இருந்த செல்வம் இன்று (10.05.2013) காலை சிகிச்சை பலனின்றி 9 மணி அளவில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி காவல்துறையினர், அரசு பேருந்து மீது கல்வீசியவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக செல்வனின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. -நமது நிருபர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக