புதன், 8 மே, 2013

Kerala நகைகளை தரமறுத்த 22 ஆசிரியர்கள் பணி நீக்கம் இஸ்லாமிய பள்ளி

கேரளாவில் நகைகளை தர மறுத்த 22 ஆசிரியர்களை நீக்கிய பள்ளி நிர்வாகம் மலப்புரம்: கேரளாவில் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பள்ளிக்காக தங்க நகைகளை கொடுக்க மறுத்த 22 ஆசிரியைகள் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருனவயா மாவட்டத்தில் உள்ள இடக்குளம் என்ற ஊரில் உள்ளது ஹித்மத் இஸ்லாமிய பள்ளி. இங்குதான் சர்ச்சைக்குரிய அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு பள்ளியின் மேலாளராக முகம்மது குட்டி என்பவர் வேலை செய்து வருகிறார். ஒரே நேரத்தில் 22 ஆசிரியைகள் பள்ளியை விட்டு நீக்கப்பட்டது பற்றி கேட்டபோது, அவர்களின் தகுதிக் குறைபாட்டினாலேயே பள்ளியை விட்டு நீக்கப்பட்டதாக கூறியுள்ளார். தங்க நகை எதுவும் ஆசிரியைகளிடம் இருந்து கேட்கவில்லை என்றும், அந்த ஆசிரியைகள் பற்றி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் புகார் கூறியதாகவும், அதனாலேயே அவர்கள் நீக்கப்பட்டதாகவும் கூறினார். பள்ளியை விட்டு நீக்கப்பட்டது தொடர்பாக ஆசிரியைகள் அனைவரும், முதல்வர், கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடந்த ஏப்ரல் 20 தேதி தொலைபேசி மூலம் புகார் தெரிவித்துள்ளனர். மாதரஸ்ஸாவின் கீழ் இயங்கும் இந்த பள்ளியில் 65 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஏற்கனவே இங்கு ஒரே நேரத்தில் 5 ஆசிரியைகள் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளதாம். பட்டப்படிப்பு மட்டுமே படித்துவிட்டு ப்ளஸ் டூ மாணவர்களுக்கு பாடம் நடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து அந்த ஆசிரியைகள் பள்ளியை விட்டு நீக்கப்பட்டனர். ஆனால் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பள்ளியை காப்பாற்ற ஆசிரியைகளிடம் தங்க நகைகளை பள்ளி நிர்வாகம் கேட்டுள்ளது. அதற்கு 22 பேர் மறுத்துவிட்டனர். இதன் காரணமாகவே தற்போது பள்ளியை விட்டு அவர்கள் நீக்கப்பட்டு விட்டதாகவும் பிற ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் பள்ளியில் இருந்து 22 ஆசிரியைகள் நீக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: